ஒரு முயற்சி

சில தினங்களுக்கு முன் நானும் கவிதை எழுதறேன்னு வீரவசனம் பேசிட்டு போய், குப்புற படுத்து யோசிச்சாலும் ஒன்னும் எழுதத் தோணல. ஆனா இன்னைக்கு காலைல நான் பார்த்த ஒரு காட்சி என்னை கொஞ்சம் பாதிச்சிடுச்சு. அதைக் கொஞ்சம் கவிதை எழுதறவங்க பாணில, பிரிச்சு எழுதிப்பார்த்தேன். இப்படித்தான் வந்துச்சு. படிச்சுட்டு கருத்தைச் சொல்லுங்க....


இதை கவிதைன்னு சொல்லலாமா???

காலையில்
அலுவலகம் வரும் வழியில்
குழந்தைக்குச் சோறூட்டிக் கொண்டிருந்தார்
பக்கத்து வீட்டு ஆண்ட்டி
அந்நேரம்
பிச்சை கேக்க வந்த
குழந்தையை காண்பித்து
தன் மகனிடம்
"ஒழுங்கா சாப்பாட்ட திங்கலைனா
இவளுக்கு உன் சோத்த குடுத்துடுவேன்"
என மிரட்டுகிறார்.

Comments

YumYes said…
OKவா இல்லையானு சொல்லுங்க ராஜூ..
நல்லா இருக்கு...
கவிதை தான்
நல்லா இருக்கு...
கவிதை தான்
YumYes said…
நன்றி நைனா.. ஆனா உங்க அளவுக்கு எதிர்கவுஜ போடமுடியாது.. :)
KingMaker said…
pinniteengale partner..ungalukullayum oru ........ irukku pola..!!
YumYes said…
என்ன பார்ட்னர்.. இதுவும் வஞ்சப்புகழ்ச்சியா??? :))
ஆழமான கவிதைக்கான கரு இதில் இருக்கு.முயன்றால் கவிதையாக்கலாம் நண்பரே..
நாடோடி இலக்கியன் சொன்னதை வனா மொனா.
YumYes said…
நன்றி நாடோடி இலக்கியன்...

நன்றி நர்சிம்...

உங்களைப் போல பெரியவங்க கொஞ்சம் டிப்ஸ் கொடுத்தா கவிதை எழுத கத்துக்குவேன்... :)
Capricorn85 said…
It is heart touching, Super
Capricorn85 said…
It is heart touching, Super
YumYes said…
நன்றி sakthish.. :)

Popular Posts