Saturday, February 2, 2013

கடல் - விமர்சனம்


ஏன் தான் இந்த OMR ரோட்டில் இவ்வளவு டிராபிக்கோ தெரியவில்லை. AGS சினிமாஸ். காலை 10:20 ஷோ. வீட்டிலிருந்து கிளம்பியதே 10 மணிக்குத் தான். தியேட்டருக்குள் போனது 10:30க்கு. உள்ளே போனபோது அர்ஜுனும் அரவிந்த் சாமியும் ஏதோ நம்ம ரெண்டு பேருக்கும் கணக்கு மிச்சம் இருக்கு என்ற ரேஞ்சில் வசனம் பேசிவிட்டு பெயர் போட, கொஞ்சம் நிம்மதி வந்தது (பெருசா ஒன்னும் மிஸ் பன்னல).

படத்தை சீன் பை சீனாக விவரிக்க பெரிதாய் ஒன்னும் இல்லை. அப்படி கதை சொல்லவும் எனக்கு உடன்பாடில்லை. ஒன் லைனில் சொல்லனும்ன கடவுளுக்கும் சாத்தானுக்கும் நடக்கும் விளையாட்டில், தர்மத்தின் வாழ்வை சூது கவ்விய போது தர்மம் எப்படி தர்மடி கொடுக்கிறது என்பதே கதை. ஏதோ ஒரு நூறு காட்சிகளை படமெடுத்து அந்த பிலிம்களை கலைத்துப் போட்டு தப்பாக எடிட் செஞ்சது போலத் தான் இருந்தது. எந்த கதாபாத்திரமும் முழுமை இல்லை.

படத்தில் பிடித்தவை:

1. ஏ ஆர் ரகுமான் இசை.
2. ராஜீவ் மேனன் சினிமாட்டோகிராபி. கடற்கரை சீன் எல்லாம் ஏதோ வெளிநாட்டு பீச்சாங்கரைகளை காட்டியது போல் இருக்கிறது.
3. தாய் இறந்து பின் வரும் சித்திரை நிலா பாட்டு. நிஜ உருக்கம்.
4. டேப் ரெகார்டரில் மக்கள் வேண்டுதல் சொல்லும் காட்சி
5. சிறு வயது தாமஸ் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் காட்சி 
6. துளசி நாயர். (15 வயசா இந்த பொண்ணுக்கு. மாற்றான் படத்துல வர்ற பால் பௌடர குடிச்சிதோ என்னவோ?)
7. மூங்கில் தோட்டம் பாடல் 
8. கிளைமாக்ஸ் சண்டை 
9. மகுடி மகுடி பாடல் இரண்டு முறை வருகிறது. சில காட்சிகள் நன்றாக இருந்தது.

பிடிக்காதது 

1. மொத்த படமும் 
2. எலேய் கீச்சான், நெஞ்சுக்குள்ளே, பாடல்கள் படமாக்கிய விதம்
3. அர்ஜுனின் நடிப்பு மிக மிக செயற்கை 

டவுட்டுகள்

1. ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் லவ் எப்படி வந்துச்சு?
2. ஹீரோயின் லூசு ஆனா புத்திசாலி லூசா மணி சார்?
3. எப்படி ஹீரோயின மட்டும் பிரசவம் பாக்க தனியா அனுப்புறாங்க?
4. கடைசில ஹீரோயினுக்கு பைத்தியமா இல்லையா
5. மொத்ததுல படத்துல என்னதான் சொல்ல வரீங்க
6. மிஸ்டர் மணிரத்னம்.. உண்மையிலேயே கடல் படத்தை நீங்க தான் டைரெக்ட் செஞ்சீங்களா..

என் பீலிங்க்ஸ்

1. ரஜினியும் விஜய்யும் யூடியூப் வெப்கேம் வசதியோடு பார்த்த பிரசவத்தை கௌதம் வெறும் கையிலே பார்த்து நம்மை திக்கு முக்காட வைக்கிறார்
2. அர்ஜுன் கிளைமாக்ஸில் (முழுதாக சந்திரமுகியாக மாறிய பிறகு), துளசியை கொல்ல போகும் போது, பயத்திலும் யப்பா என கூறும் துளசியின் நடிப்பு (இது உலக மகா நடிப்பு டோய் )
3. கடைசிக் காட்சியில் என்னைத் தெரியலைன்னு சொல்லிறாத பியா'னு கௌதம் தலையை முட்டிக்கொண்டு அழும் போது இவனும் லூசாகி கருப்பும் கருப்பும் ஒரு குருப் ஆகிடுமோ என வரும் 

டவுட்டை அடக்க முடியவில்லை
4. இந்த லூசு மட்டும் நல்லா டிரெஸ் பண்ணியிருக்கு என என் மனைவி பீலிங்காக, நான் #இங்க இருக்கும் பாதி பேர் நல்லா தான் டிரஸ் பண்ணிருக்காங்க. இந்நேரம் அனைவரும் கிறுக்காயிருப்பாங்க 

டிஸ்கி 

கடல் பார்க்கணும்னு நினைக்கிறவங்க மெரினாவுகோ இல்லை வேற ஏதோ பீச்சுக்கோ போய் பார்த்துக்கோங்க. எங்க ஊர்ல பீச் இல்லன்னு சொல்றவங்க கடல் போட்டோவ வெறிச்சு வெறிச்சு 

பாத்துக்கோங்க ஆனா தியேட்டர் பக்கம் மட்டும் போய்டாதீங்க 

பின்குறிப்பு 

தயவு செய்து வாலண்டிரி ரிடயர்மென்ட் வாங்கிடுங்க மணி 

5 comments:

அரவிந்த் said...

\\கடல் பார்க்கணும்னு நினைக்கிறவங்க மெரினாவுகோ இல்லை வேற ஏதோ பீச்சுக்கோ போய் பார்த்துக்கோங்க. எங்க ஊர்ல பீச் இல்லன்னு சொல்றவங்க கடல் போட்டோவ வெறிச்சு வெறிச்சு பாத்துக்கோங்க ஆனா தியேட்டர் பக்கம் மட்டும் போய்டாதீங்க\\

Here comes the ultimate.. I'm taking this for sharing. Hope you permit..

அரவிந்த் said...

I shared this in facebook and twitter by mentioning your blog. If you get more visitors today, that'll be because of me.. Just for fun.. Keep posting.

Achilles/அக்கிலீஸ் said...

Thanks அரவிந்த் :)

jaisankar jaganathan said...

ஹாய் அக்கில்லிஸ் ,
நான் பிரியம். மறந்துடாதே. நான் தான் உன் காலில் அம்பு விடுவேன்.

படம் விமர்சனம் சூப்பர். மணிரத்தினம் மொக்கையாகி ரொம்ப நாள் ஆவுது

பாரிவேந்தன் said...

SUPER