தற்குறிப்பேற்ற அணி


தமிழ் இலக்கணத்தில் "தற்குறிப்பேற்ற அணி" என்று ஒரு பகுதி உண்டு. ரொம்ப அருமையான ஒரு பகுதி அது. தற்குறிப்பேற்ற அணியைப் பத்தியும், ஏன் இதைப் பத்தி இப்போ பேசிட்டு இருக்கேன்னு பார்க்கறதுக்கு முன்னால ஒரு சின்ன "Flashback".

சமீபத்துல என் தங்கையின் பிறந்த நாளுக்கு ஒரு புத்தகம் பரிசாக கொடுக்கலாம்'னு ப்ளான் பன்னி புக் ஷாப்'ல போய் தேடின போது நிறைய சாண்டில்யன் எழுதின புத்தகங்களைப் பார்த்தேன். கடல் புறா, யவண ராணி என நிறைய புத்தகங்கள். ஆனா எனக்கு சாண்டில்யன் அவர்களைப் பத்தி எதுவும் தெரியாததால, சிவக்குமார் எழுதிய "டைரி 1946-1975" என்ற புத்தகத்தை வாங்கிப் பரிசளித்தேன். ஆனாலும் எனக்கு சாண்டில்யன் மேல ஒரு சின்ன ஆர்வம் அப்போ வந்துட்டது. என்னோட அப்பா ஒரு தமிழ் ஆசிரியர். அவர்கிட்ட சாண்டில்யன் பத்தி கேட்ட போதுதான், யவண ராணி புத்தகத்தில் இந்த தற்குறிப்பேற்ற அணி நிறைய இடத்துல வருதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

சரி. தற்குறிப்பேற்ற அணி என்றால் என்ன. இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக்கூறுவது தற்குறிப்பேற்ற அணி. உதாரணம்:

இந்த சிலப்பதிகாரப் பாடலைப் பாருங்கள்.

"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட"

இதன் பொருள்: கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.

அதே போல் இன்னொரு எடுத்துக்காட்டையும் பார்ப்போம்.

"மண்படுதோள் கிள்ளி மதயானை மாற்றரசர்
வெண்குடைத் தேய்ந்த வெகுளியால் - விண்படர்ந்து
பாயுங்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்
தேயும் தெளிவிசும்பில் நின்று"

பாடலின் பொருள்: மண்ணுலகைத் தாங்கும் தோள்வலிமையுடைய கிள்ளியின் மதயானை போரில் பகை அரசர்களுடைய வெண்கொற்றக்குடையைச் சிதைத்தது. அந்தச் சினத்தோடு (வெண்கொற்றக்குடை என நினைத்து) வானிலேறி நம்மீதும் பாயுமோ என குளிர்நிலவு அஞ்சித் தேய்கிறது.

சந்திரன் தேய்வது இயல்பு. பகைவரின் வெண்கொற்றக்குடையை தேய்த்தது போல் தன்னையும் தேய்க்குமோ என சந்திரன் அஞ்சித் தேய்வதாகக் கூறியது பெயர்பொருள் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறிய தற்குறிப்பேற்றம் ஆகும்.

அதெல்லாம் சரி, இப்போ என்ன தமிழ் மீது திடீர் பாசம் என்று கேக்காதீங்க. நமக்குத்தான் எல்லா ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதே. அதுதான் இந்தப் பதிவுக்கே காரணம். சாண்டில்யன் எழுதிய "யவண ராணி" கதையில் ஒரு அத்தியாயம் பூராவும், அந்த ராணி குளிப்பதை விவரிக்க நிறைய தற்குறிப்பேற்ற அணியைப் பயன்படுத்தியிருப்பார் சாண்டில்யன். அதைப் படிச்சா போதும். இப்போ எழுதற காதல் பாடல்கள் எல்லாம் தூசி தான். சில உதாரணம் இங்கே...

"யவண ராணி ஆடை இல்லாமல் குளிப்பதை, சந்திரன் (நிலா) மறைந்திருந்து பார்ப்பான். அந்த சந்திர ஒளி ராணியின் உடல் மீது வட்ட வட்டமாக விழும்." அது இயல்பான ஒன்றுதான். ஆனால் கவிஞர், இதற்கு, "ராணியின் அழகில் மயங்கி சந்திரன் அவள் மீது பொற்காசுகளை வீசுகிறான்" என்று எழுதியிருப்பார். இது தற்குறிப்பேற்ற அணிக்கு ஒரு அறுமையான எடுத்துக்காட்டு.

அதேபோல் "ராணி குளித்து முடித்துவிட்டு, தன் உடலை துவட்டிய துணியை, ஒரு மரத்தின் மீது காயப்போடுவாள்." அப்பொழுது அந்தத் துணி "நான் இவ்வளவு நேரம் இந்தப் பேரழகியின் உடலின் பல இடங்களில் படர்ந்திருந்தேன். ஆனால் இப்போது இந்த மரத்தின் மீது என்னை காயப்போட்டுவிட்டாளே" என கண்ணீர் வடிப்பதாக எழுதியிருப்பார். ஈரமான துணியில் இருந்து நீர் சொட்டுவது இயல்பு. அதை கண்ணீர் வடிப்பதாக் தன்குறிப்பை ஏற்றி அழகாக கூறியிருப்பார் சாண்டில்யன்.

இதுபோல் பல தற்குறிப்பேற்ற அணிகளை அந்த அத்தியாயத்தில் காணலாம். இதைப் படித்தவுடன், சாண்டில்யனின் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகிவிட்டது. யவண ராணி புத்தகத்தைப் படித்துவிட்டு இன்னும் விரிவான ஒரு பதிவை கூடியசீக்கிரம் எழுதுகின்றேன். நன்றி.



Comments

தற்குறிப்பேற்ற அணியை இப்படி சாண்டில்யனின் எடுத்துத்துக் காட்டுகளோடு சொல்லிக் குடுத்திருந்த நாங்களும் ஸ்கூல்லயே படிச்சிருப்பமுல்ல,,,,
வாழ்த்துக்கள்
நன்றி ஆரூரன் விசுவநாதன் :)
ஜீன்ஸ் படத்தில் வரும் ஒரு பாடலில் கூட வைரமுத்து அவர்கள் தற்குறிப்பேற்ற அணியைப் பயன்படுத்தியிருப்பார்....

"ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது உன் கூந்தலில் நின்றாடத்தான்" என வரும் அந்த வரிகளில், தற்குறிப்பேற்ற அணியைப் பார்க்கலாம்.

விளக்கம்: பூக்கள் ஒற்றைக் காலில்தான் பூத்துக்குலுங்கும். ஆனால் அது உன் கூந்தலில் பூச்சூடத்தான் அப்படி ஒற்றைகாலில் நின்று அடம்பிடிக்கின்றன என தன் கருத்தை ஏற்றிக்கூறியிருப்பது, தற்குறிப்பேற்ற அணி.

பி.கு: உண்மையிலேயே இப்படி யாராவது எடுத்துக்காட்டுடன் சொல்லித்தந்திருந்தால், நான் தமிழில் நல்ல மார்க் வாங்கியிருப்பேன். :)
Miga alaga palaya ninaivugalai kilariteenga

unga anumadhiyoda indha vivarangalai nan copy paniaklama

en mail box la pathirama vachurkuraane

neram irundhal vanja pugalchi ani pari eludhungha
நன்றி கார்த்திக் பிரபு... கண்டிப்பாக நீங்க இந்தப்பதிவை நகல் எடுக்கலாம்... :)

வஞ்சப் புகழ்ச்சி அணி பத்தி ஒரு பதிவு எழுத முயர்ச்சிக்கிறேன்... :)
KingMaker said…
partner, idhukku munnadi tamil tamil nu pesi irukken..ezhudhi irukken..aana ungala maadhiri seyal paduthinadhu kidaiyaadhu..ini enakkum idhu pola oru blog ezhudhanum nu oru veri vandhuduchi..enakku guide pannunga..
பார்ட்னர்... நேரா செட்டியார் கடைக்கு போய் உடனே கோனார் நோட்ஸ் வாங்குங்க... என்ன மாதிரி எழுத ஆரம்பிச்சிடுங்க... ஹிஹிஹி... :)

பார்ட்னர்.. நீங்க தான் கவிதை நல்லா எழுதறீங்களே.. உடனே ஒரு ப்லாக் ஓப்பன் பன்னிடுங்க... :)

Popular Posts