Saturday, November 7, 2009

ரஜினி ஸ்டைலில் ஒரு கண்டக்டர்


ரொம்ப நாளைக்கு அப்புறம் சனிக்கிழமை ஆஃபீ்ஸுக்கு ஒரு அர்ஜண்ட் வேலையா போக வேண்டிய கட்டாயம். மேனேஜரை மனசுக்குள்ள திட்டிகிட்டே வீட்டிலிருந்து கிளம்பினேன். பஸ் ஸ்டாப்பில் பார்த்தால் ஒரு பெரிய கும்பல் பஸ்ஸுக்கு வெயிட்டிங். அதேபோல் எல்லா பஸ்ஸிலும் நல்ல கூட்டம். இன்னைக்கும் பஸ்ஸில் ஸ்டாண்டிங் தானா என்ற கடுப்புடன் காத்திருந்தால், கொஞ்சம் கூட்டம் கம்மியான பஸ் ஒன்னு வந்தது. ஆனாலும் பஸ்ஸுல ஏதோ ஒரு வித்தியாசம் தெரிஞ்சுச்சு. உள்ளார இருக்கிற மக்கள் எல்லாம் இறங்கறவங்களைப் பார்த்தும், ஏற்றவங்களைப் பார்த்தும் ஒரு மாதிரி சிரிச்சாய்ங்க. திடீர்னு கண்டக்டர் கன்னடத்துல ஏதோ சொல்ல எல்லாரும் குபீர்னு சிரிக்கிறாங்க. இது என்னடா இது "ஜஸ்ட் ஃபார் லாஃப்" மேட்டரா? இன்னைக்கு இவிங்க போதைக்கு நாம தான் ஊறுகாயா? என உள்ளுக்குள்ள பயந்தாலும், வேற வழியில்லாம பஸ்ஸில ஏறிட்டேன்.


"சர்ஜாபூர் ரோடு ஒந்து கொடி" என டிக்கெட் கேட்டேன். பெரும்பாலான பெங்களூர் BMTC கண்டக்டர்கள் போல இவரும் டிக்கெட் பின்னாடி சில்லரை மிச்சம் எவ்வளவுனு எழுதிட்டு, கடைசில சில்லரை வாங்கும் போது டிக்கெட்டை நம்மிடம் இருந்து வாங்கிகிட்டு சில்லரை கொடுப்பவராக இருக்கக்கூடாது என வேண்டிக்கொண்டு பத்து ரூபாய் நோட்டை நீட்டினேன். நல்ல மனுசன், மீதிச் சில்லரை ரெண்டு ரூபாய டாஸ் போடுபவர் போல சுண்டி விட்டு என்னிடம் நீட்டினார். பிறகு டிக்கெட்டை கிளித்து, உஷ்ஷ்ஷ் என பேக்கிரவுண்டு சவுண்டு எல்லாம் கொடுத்துவிட்டு, சைனீஸ் படத்துல சண்டை போடுறதுக்கு முன்னாடி, கத்தியை சுழற்றி ஒருமாதிரி ஸ்டைலா நீட்டுவாங்களே, அந்த மாதிரி டிக்கெட்டை என்னிடம் நீட்டினார். என்னடா மனுஷன் டூட்டி நேரத்திலேயே கஞ்சா அடிச்சிட்டு எகிறிட்டாரா என உள்ளுக்குள்ள மைல்டா ஒரு டவுட்டு வந்துச்சு. தலை சொறிஞ்சிகிட்டே, எதுக்கும் தற்காப்புக்காக, டிஃபன்ஸ் ஸ்டாண்ட்ஸில் நின்று டிக்கெட்டை வாங்கி பாக்கெட்டில் போட்டுவிட்டு பஸ்ஸுக்குள்ள நோட்டம் விட ஆரம்பித்தேன்.

திடீரென பஸ்ஸின் முன்பகுதியிலிருந்து "எக்ஸ்கியூஸ்மீ. வன் டிக்கேட் டூ மாரத்தஹள்ளி ப்ளீஸ்" என ஒரு தேன் குரல். யார்ரா அதுன்னு பார்த்தா, பெங்களுர்ல பெய்யுற மழையினால அடிக்கிற இந்தக் குளிர்லயும் மூஞ்சிய மறைக்கிற மாதிரி கூலிங்கிளாஸ், டைட்ட்ட்ட் ஜீன்ஸ், அதையும் விட ஒரு டைட்ட்ட்ட்ட்ட்ட்டான டீ-ஷர்ட் போட்டுகிட்டு ஒரு ஃபிகர். சமீபத்திய யூ.எஸ் ரிட்டர்ன் போல. ஸ்லாங் நம்ம ஊருக்கு கொஞ்சம் ஓவராகவே இருந்தது. ஃபிகர் டிக்கெட் கேட்டு நூறு ரூபாயை நீட்ட, நம்ம கண்டக்டர் சில்லரை இல்லையா? எனக் கேட்டதற்கு, "நோப், ஐ டோண்ட் ஹாவ் எனி ச்சேண்ஜ்" என்று ஃபிகர், லிப்ஸ்டிக் போட்ட தன் செவ்விதழைப் பிதுக்க, தலைவர், "ஐ ஜஸ்ட் டோண்ட் லைக் திஸ்" என ஃபிகரின் ஸ்லாங்கிலேயே பதிலளிக்க, என்னையும் சேர்த்து அல்மோஸ்ட் பஸ்ஸிலிருந்த அனைவரும் சிரித்துவிட்டோம்.

நம்ம ரஜினி கண்டக்டராய் இருந்தபோது அவரின் ஸ்டைலுக்காகவே சிலர் பஸ்ஸில் பயனம் செய்வார்களாம். தலையில் போட்டிருந்த ஆர்மி கேப்பை அடிக்கடி ஸ்டைலாக திருப்பிவிட்டுக்கொண்ட போதும் சரி, ஸ்டைலாக விசில் அடித்துவிட்டு பஸ்ஸில் ஏறி இறங்கும் போதும் சரி, டிக்கெட்டை கிளித்து ஸ்டைலாக நீட்டும் போதும் சரி, அடிக்கடி இவர் ரஜினியை நியாபகப்படுத்தினார். பஸ்ஸுல ஃபுள் கூட்டம் இருந்த போதும், தன் தொழிலின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து செய்த இவரைப் பார்த்தபிறகு, நான் சனிக்கிழமை ஆஃபீஸ் போறோமே என கவலைப்படவில்லை. அந்த சம்பவம் அந்த நாளின் ஒரு நல்ல ஆரம்பமாக அமைந்தது.


ஆனா ரிட்டர்ன் வரும் போது வழக்கமான பெங்களுர் பஸ் பயன அனுபவம். எட்டு ரூபாய் டிக்கெட்டுக்கு, ரெண்டு ரூபாய் மீதிச்சில்லரை கொடுக்கவேண்டும், என டிக்கெட்டின் பின்னாடி குறித்து விட்டு, டிக்கெட் கொடுத்தார் கண்டக்டர். இன்னைக்கு எப்படியும் டிக்கெட்டை அவர்கிட்ட கொடுக்காம மீதிச் சில்லரையை வாங்கிடனும் என தமிழ் ஹீரோ பானில மனசுக்குள்ள சபதம் எடுத்துவிட்டு, சீட்டில் அமர்ந்தேன். நான் இறங்கும் இடத்துக்கு முந்திய ஸ்டாப்பிங் வந்தவுடன், சில்லரை கேட்கச் சென்றேன். டிக்கெட்டை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு இரண்டு ரூபாய் சில்லரை கொடுத்தார் கண்டக்டர். டிக்கெட் குடுங்க என இரண்டு மூன்று முறை கத்தியும், நான் சொல்வதைக் கேட்காதவர் போல அங்கும் இங்கும் திரும்பி என்னை கடுப்பேற்றினார். வந்த கோவத்திற்கு துண்டை அவர் கழுத்துல போட்டு என்னடான்னு கேட்கலாம்னு நெனச்சேன். ஆனா....

பஸ்ஸுல பயனம் பன்னின பக்கா பஞ்சாபி பிகரை பராக்கு பார்த்து பல்லிளித்துவிட்டு பயபுள்ள பவ்வியமா படியிறங்கி போய்விட்டேன். அவ்வ்வ்வ்வ்....

6 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

//என்னடா மனுஷன் டூட்டி நேரத்திலேயே கஞ்சா அடிச்சிட்டு எகிறிட்டாரா என உள்ளுக்குள்ள மைல்டா ஒரு டவுட்டு வந்துச்சு
//நான் சனிக்கிழமை ஆஃபீஸ் போறோமே என கவலைப்படவில்லை
super keep rockkkk

Achilles/அக்கிலீஸ் said...

நன்றி ஸ்ரீ.கிருஷ்ணா.. :))

நேசமித்ரன் said...

கலக்கல் இடுகை நண்பா

Achilles/அக்கிலீஸ் said...

நன்றி நேசமித்ரன்.. :)

வனம் said...

வணக்கம் அக்கிலீஸ்

ம்ம்ம் நானும் இதே அனுபவங்களை பெற்றிருக்கின்றேன்.

நல்லா கோர்வையாக எழுதுகின்றீர்கள்.

ஆமா நானும் அதே ஒயிட்பீல்டு - ல தான் இருக்கேன் உங்க இடுகையை பார்த்தால் நீங்களும் அந்த பக்கம்தானு தெரியுது.

அனேகமாக நீங்கள் என்னை பேருந்தில் பார்த்திருக்கலாம் நானும் அதே சர்ஜாப்பூர் வழித்தடம்தான்

இராஜராஜன்

Achilles/அக்கிலீஸ் said...

//நல்லா கோர்வையாக எழுதுகின்றீர்கள்.//
நன்றி வனம்..

நான் ஒயிட்ஃபீல்ட்'ல இல்லை... கோரமங்களா... :))