Inglourious Basterds திரை விமர்சணம் - ஹிட்லரைக் கொல்ல இரட்டைச் சதி


போரை மையப்படுத்தி வரும் படங்கள் என்றாலே துப்பாக்கிச்சத்தம், பீரங்கிகள், வெடிகுண்டுகள், என பார்த்துப் பழகிய நம் கண்களுக்கு ஒரு வித்தியாசமான படத்தைத் தந்திருக்கிறார், இங்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் படத்தின் இயக்குனர் குவெண்டின் டாராண்டினோ (Quentin Tarantino). இந்தப் படத்தின் கதை இரண்டாம் உலகப் போரின் காலகட்டத்தில் நடக்கும் கதை என்றாலும், ஆல்டர்னேட் ஹிஸ்டரி எனப்படும் fiction வகையில் இரண்டாம் உலகப் போருக்கு ஒரு புதிய முடிவைக் கொடுத்திருக்கிறார்கள்.


இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனி யூதர்களைக் கொன்றுகுவித்தது அனைவரும் அறிந்ததே. ஒரு யூத குடும்பத்தை கண்டுபிடிப்பதற்காக, பிரான்ஸிலுள்ள ஒரு வீட்டிற்கு வரும் கர்ணல் ஹான்ஸ் லாண்டா (தி ஜூ ஹண்டர்), அங்கிருக்கும் மனிதரிடம் அசால்டாக சிறிது நேரம் பேசிவிட்டு, அங்கு ஒளிந்துகொண்டிருக்கும் யூதர்களைக் கண்டுபிடித்து அவர்களைக் கொல்லும் காட்சியுடம் ஆரம்பிக்கும் படம் அதன்பின் சூடு குறையாமல் கடைசிவரை செல்கிறது. அந்தக் குடும்பத்திலிருந்து ஷோஷானா எனும் டீனேஜ் பெண் மட்டும் தப்பிச்செல்கிறாள்.

அதே சமயம், பாஸ்டர்ட்ஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க சோல்ஜர்கள், லெப்டினண்ட் ஆல்டோ ரெய்ன் தலைமையில் பல ஜெர்மன் அதிகாரிகளைக் கொல்கின்றனர். ஜெர்மன் அதிகாரிகளிடம் இருந்து ரகசியங்களைப் பெற, அவர்கள் அதிகாரிகளை பேஸ்பால் மட்டையால் அடித்துத் துன்புறுத்துவது வழக்கம்.

துன்புறுத்தி ரகசியங்களைப் பெற்றவுடன், ஒரே ஒரு ஜெர்மன் சோல்ஜரை மட்டும் பிடித்து அவன் நெற்றியில் ஸ்வஸ்திக்காவை கத்தியால் செதுக்கி வரைந்து அதன் பின் அவனைத் தப்பிக்க விட்டுவிடுவார்கள். அவன் இவர்களின் பராக்கிறமங்களை மற்ற ஜெர்மன் அதிகாரர்களிடம் தெறிவிக்க, பாஸ்டர்ட்ஸ் மேல் ஒரு பயம் ஜெர்மன் படைகளிடம் உண்டாகிறது. இவர்களைப் பற்றிய பயம் ஹிட்லரையும் விட்டுவைக்கவில்லை.

தப்பிச்சென்ற ஷோஷானா பாரிஸ் நகரில் ஒரு தியேட்டர் ஓனராகி, தன் பெயரை மாற்றிக்கொண்டு வாழ்கிறார். அவளையே சுற்றி வரும் ஒரு ஜெர்மன் படைவீரன், தன் பராக்கிறமங்களைப் பற்றிய ஒரு திரைப்படத்தைத் திரையிட ஷோஷானாவின் தியேட்டரைத் தேர்ந்தெடுக்கிறான். இந்த படத்தின் துவக்கவிழாவிற்கு ஹிட்லரும் வருவதை கேள்விப்படும் ஷோஷானா, தன் காதலன் மார்செலுடன் இனைந்து தியேட்டரை கொளுத்திவிட்டு, அனைவரையும் கொல்லத் திட்டமிடுகிறாள்.

அதேசமயம் பாஸ்டர்ட்ஸ், பிரிட்டிஷ் மற்றும் ஒரு இரட்டை உளவாளியான ஜெர்மன் நடிகையுடன் இனைந்து தியேட்டரை வெடிக்க வைக்க சதி செய்கின்றனர். அவர்கள் ப்ளான் படி இரண்டு பாஸ்டர்ட்ஸ், ஒரு பிரிட்டிஷ் ஆகிய மூவரும் ஜெர்மன் படை வீரர்கள் போல் உடை அணிந்து நடிகையின் உதவியுடன் தியேட்டருள் சென்று பாம் வைத்து ஹிட்லரைக் கொல்ல வேண்டும். ஆனால் இந்த மூவரும் நடிகையைச் சந்திக்கும் ஒரு பாரில், வேறு ஒரு ஜெர்மனுடன் எதிர்பாராதவிதமாக ஆரம்பிக்கும் பேச்சுவார்த்தை சண்டையில் முடிய நடிகையைத் தவிற அனைவரும் இறக்கின்றனர்.

காலில் மட்டும் அடிபட்டிருக்கும் நடிகையை மீட்கும் ஆல்டோ, வேறு ஒரு ப்ளான் செய்து தியேட்டருள் மேலும் இரு பாஸ்டர்ட்ஸுடன் நுழைகிறார். நடிகை ஒரு உளவாளி என கண்டுபிடிக்கும் ஹான்ஸ் லாண்டோ, அவளைக் கொன்றுவிட்டு, ஆல்டோவயை வேறு இடத்திற்கு கடத்துகிறான். ஆனால் மற்ற இரண்டு பாஸ்டர்ட்களையும், அவன் எதுவும் செய்யாமல்விட, அவர்கள் அவர்களின் சதியை நிறைவேற்றச் செல்கின்றனர்.

ஷோஷானா மற்றும் பாஸ்டர்ட்ஸ் ஆகிய இருவரின் சதியும் வெற்றிபெற்றதா, ஆல்டோவின் கதி என்ன என்பதையெல்லாம் அகன்ற வெண்திரையில் பாருங்கள். இப்போது படத்தின் சில சுவாரஸ்யங்கள்.

1. கர்ணல் ஹான்ஸ் லாண்டோவாக வரும் கிறிஸ்டோப் வால்ட்ஸ் எனும் ஆஸ்திரிய நடிகர், நடிப்பில் சும்மா பின்னி பெடலெடுக்கிறார். முதல் சீனில் யூத குடும்பததை கண்டுபிடிப்பதிலும் சரி, ஷோஷானாவிடம் ரெஸ்டாரண்டில் பேசும் சீனிலும் சரி, நடிகைதான் உள்வாளி என கண்டுபிடிக்கும் சீனிலும் சரி, மனுஷன், கூலாக, அலட்டிக்கொள்ளாமல், தன் வில்லத்தனத்தைக் காட்டி நமக்கே ஒருவித அமிலத்தைச் சுரக்க வைக்கிறார். இவர் இந்த ரோலுக்காக ஏற்கனவே கான்ஸ் திரைப்பட விழாவில், சிறந்த நடிகருக்கான விருது வாங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. லெப்டினண்ட் ஆல்டோ ரெய்னாக வரும் பிராட் பிட், வித்தியாசமான ஆக்செண்டில் பேசி, நம்மைச் சிரிக்கவும் வைக்கிறார். அவரின் பாஸ்டர்ட்ஸ் குரூப் ஜெர்மன் படைகளிடம் பேசும் காட்சி நச்.

3. படத்தின் மற்றொரு சிறப்பு சினிமாட்டோக்ரஃப்பி அண்ட் டைரக்ஷன். அதேபோல் படத்தின் இசையும் சூப்பர்.

மொத்ததில் படம் டாப் டக்கர். கண்டிப்பாக இந்தப்படம் உங்களைத் திருப்தி படுத்தும் என்பதை மட்டும் என்னால் உறுதி அளிக்கமுடியும். அண்ட் இந்த வருட ஆஸ்காருக்கு இந்த படம் ஒரு பெரிய போட்டியாக அமையும்.

Comments

kanagu said…
சென்னைல எப்ப ரீலிஸ்-னு தெரியலயே.. வந்தா பாக்குறத விட என்ன வேல எனக்கு...

விமர்சனம் சூப்பருங்க :))
YumYes said…
நன்றி kanagu :))
"கண்டிப்பாக இந்தப்படம் உங்களைத் திருப்தி படுத்தும் என்பதை மட்டும் என்னால் உறுதி அழிக்கமுடியும்."

இதுல ஏதும் உள்குத்து இல்லையே.. :)
YumYes said…
ஸ்பெல்லிங் மிஸ்டேக் நிறைய இருக்கும்.. கண்டுக்காதீங்க... இப்போ திருத்திவிட்டேன்... நன்றி.. :)
YumYes said…
பை தி வே பிரசன்னா, படம் உண்மையாகவே அருமை. :))
ரவி said…
அருமையான விமர்சனம் அக்கிலிஸ். உடனே படம் பார்க்க தூண்டுகிறது..!!!

ஓட்டு போட்டுவிட்டேன்....
YumYes said…
நன்றி செந்தழல் ரவி.. :))

Popular Posts