நானும் என் HTC மொபைலும்...

இது மசாலா மிக்ஸோ, சிறுகதையோ இல்லை. என்னோட சொந்தக்கதை. HTC மொபைல் வாங்கி நான் நொந்தகதை... என் சோகக்கதை... :((

எனக்கும் மொபைல்களுக்கும் என்னைக்குமே ராசியில்லை என்று என் அம்மா அடிக்கடி கூறுவார். உண்மைதான். கடந்த ஆறு வருடத்தில் ஐந்து மொபைல்களை ரிப்பேராக்கிவிட்டேன். இதோ கடைசியாக லிஸ்டில் இனைந்துவிட்டவர், நான் ஆசை ஆசையாக கடந்த வருடம் வாங்கிய HTC Touch.


கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது வாங்கிய சாம்சங் சி100 செல்ஃபோன், ஒரு சுபயோக சுபதினமான வினாகயகர் சதுர்த்தி அன்று தண்ணீரில் விழுந்து புஸ்ஸானது. அடுத்து வாங்கிய நோக்கியாவை எவனோ ஒருவன் லவட்டிக்கொண்டு போக, புதிதாய் ஒரு சாம்சங் இ330 ஃபோன் வாங்கினேன். ஒருநாள் இந்த ஃபோனும் கீழே விழுந்து சிதறு தேங்காய் போல செட்டு ஒருபக்கம், பாட்டரி ஒருபக்கம் என சிதற, கொஞ்ச நாளைக்கு செல்லோடேப் போட்டு ஒட்டி அதையும் உபயோகித்து வந்தேன். பிறகு தான் என் வாழ்நாளிலேயே அதிக நாட்கள் நான் பயன்படுத்திய செல்ஃபோனான நோக்கியா 6320ஐ ஃபோனை வாங்கினேன்.

எனக்கு மிகவும் பிடித்த ஃபோன் இது. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் உபயோகித்தவந்த இந்த ஃபோன், நான் வெளிநாடு செல்ல ஏர்போர்ட்டில் காத்திருந்த போது, ரிப்பேரானது. வெளிநாட்டிலிருந்து திரும்பியவுடன் டச் ஃபோன் வாங்கவேண்டும் என்ற ஒரே முடிவுடன் சென்று HTC Touch ஃபோனை வாங்கி வந்தேன்.

வாங்கிய ஒரே வாரத்தில், என் பிறந்தநாள் அன்று, ஃபோனை மிதித்து, டிஸ்ப்ளேவை நொருக்க, சர்வீஸ் செண்டரில் கொண்டுபோய் குடுத்தால், இதை வெச்சு டச்சு பன்ன முடியாது, வேனும்னா டிச்சு பன்னலாம், 3500 ரூபாய் செலவு ஆகும் எனக்கூற, வேறு வழியில்லாமல், அந்தக் காசை குடுத்து ஃபோனை சரி செய்து வந்தேன். அதன் பிறகு சிறு சிறு பிரச்சனை வந்தாலும், போன வாரம் தான் அந்தப் பிரச்சனை எல்லாம் தன் சுயரூபத்தைக் காட்டியது.

கீ-பேட் வேலை செய்யவில்லை. டிஸ்ப்ளேயில் ஃப்ளிக்கரிங்கும் வர, செட்டைத் தூக்கிக்கொண்டு சர்வீஸ் செண்டருக்குச் சென்றால் அவன் விண்டோஸை மாற்றிவிட்டு, ஏதேதோ ஆராய்ச்சி செய்துவிட்டு வந்து, "சார் மதர்போர்ட் போயிடுச்சு. 16000 ரூபாய் செலவாகும்" என்றான். அடப்பாவி என் ஃபோனோட விலையே அவ்வளவு இல்லையே என்றதற்கு, வேற வழியில்லை சார் என்றுவிட்டான். சரி விண்டோஸாவது மாத்தி குடுத்தானே என பேசாமல் வாங்கி வந்துவிட்டேன். நல்லவேளையாக அதற்கு அவன் காசு எதுவும் வாங்கவில்லை.

பிரச்சனையே இப்போதான் ஆரம்பம். கீ-பேட் வேலை செய்யாததால், கேமராவில் ஃபோட்டோ பிடிக்க முடியாது. பழைய விண்டோஸ் வெர்ஷனில் இன்கமிங் கால் அட்டெண்ட் பன்ன டச்-ஸ்கிரீனில் வசதி இருந்தது. இந்த வெர்ஷனில் கீ-பேடைக் கொண்டுதான் இன்கமிங் கால்களை அட்டெண்ட் செய்யவேண்டும். அதனால், காலை கேன்சலும் செய்யவும் முடியாது, அட்டெண்ட் செய்யவும் முடியாது. சைலண்டில் போட்டுவிட்டு, கால் முடியும் வரை காத்திருந்துவிட்டு, பிறகு நான் தான் கால் செய்யவேண்டும். எல்லா செலவும் எனக்குத்தான். இதனால் தான் அந்த சர்வீஸ்மேன் என்னிடம் காசு வாங்கவில்லையோ என்னவோ. படுபாவிப்பய ஒரு சிக்னலாவது குடுத்திருக்கக் கூடாதா??? :(

வாமனன் படத்தில் சந்தானம் கடைக்காரரிடம், ஒரு பொம்பளை செல்ஃபோன் குடுங்க என கேட்பார். பொம்பளை செல்ஃபோன் என்றால் இன்கமிங் மட்டும் தானாம். என்னோட செல்ஃபோனில் அவுட்கோயிங் மட்டும்தான். என்னோட செல்ஃபோன் அப்படியென்றால் "Definitely Male".

Comments

Vijay Anand said…
HTC Mobile very worst , i had very bad experience in HTC Mobile.
Never buy that Brand phones.
Thanks Vijay Anand...

என்னை மாதிரி ஆட்களெல்லாம் பட்டா தான் திருந்துவாங்க.. :((

அடுத்து பேசாம IMEI நம்பர் இருக்குற ஒரு சைனா செட்ட வாங்கலாம்னு இருக்கேன்..
Anonymous said…
try LG Products. Its Strong and Sweet.
Thanks redflame. One excellent thing I noticed in LG phones were its graphics. Graphics was awesome in LG and samsung mobile phones.. Anyway I'm planning for a dual sim mobile. :))
ரொம்ப சோதனை தான்!

நான் அதிகபட்சமாக போனுக்காக செலவு செய்ததே 5400 ரூபாய் தான்!(போன் விலை)

அதற்கு மேல் செலவு செய்ய மனசு வராது!
இந்த முறை 5000க்கு கம்மியாதான் செல்ஃபோன் வாங்கனும். டியூவல் சிம் ஃபோன் தான் பார்த்துட்டு இருக்கேன். :(
ரைட்டு அருகில் இருந்து ஒரு ஆத்திகர் சொல்ல்லுகிறார் இதெல்லாம் சனிப் பெயர்ச்சியின் செயல் ராகு கேது பெயர்ச்சியின் துவக்கம் என்று
சனி இப்படித்தான் சங்கூதனுமா???
வனம் said…
வணக்கம்

நான் கடந்த 3 வருடங்களாக (ஒரே) O2 பாவிக்கின்றேன் எனக்கு தெரிந்து நன்றாக இருக்கின்றது.

என் அனுபவத்தில் எந்த போனாக இருந்தாலும் சர்வீஸ் சென்டர் போனால் அதோடு அது பனால்தான்.

இதற்கு முன் ஒரு crome போன் வாங்கி பட்டேன்.

இராஜராஜன்
நன்றி இராஜராஜன். இந்த முறை ஹைஎண்ட் ஃபோன் எல்லாம் வாங்கப்போவதில்லை...

//என் அனுபவத்தில் எந்த போனாக இருந்தாலும் சர்வீஸ் சென்டர் போனால் அதோடு அது பனால்தான்.//

உண்மைதான். இவங்க எல்லாரும் சுய லாபத்தை தான் எதிர்பார்க்கிறார்கள்... :((

Popular Posts