இயலாமைகள் - எதிர்கவுஜ


நம்ம தண்டோரா அண்ணன் எழுதிய ஒரிஜினல் இங்க... :))
சாஃப்ட்வேர் கம்பெனியில் இருப்பதால், நமக்கு நடந்த ஒரு நிகழ்வை, கவுஜயா போடலாம்னு தோனிச்சு. அதன் வடிவம் இங்கே, நம்ம தண்டோரா அண்ணன் உபயத்துல... :)

நெரிசலான லிஃப்டில்
சிறு இடைவெளியில்
கூனி..குறுகி.. புகுந்து

சற்றே கிடைத்த இடத்தில்
கம்பியை பற்றி
ஆசுவாசம்..

முன்பக்கம் நெரிசலில்
பார்த்த முகம்..
நெடுநாள்
பார்க்காத முகமும்
கூட...

பழைய ப்ராஜக்ட் மேனேஜர்
அருகில் போகத்தான்
தைரியமில்லை

அடுத்த மாடியில்
கள்வனாய் இறங்கி
படிகளில் நடந்தேன்

காரணம் ஒன்றும்
பெரிதாயில்லை
குடுத்த வேலையை
முடிக்கவில்லை.

பாவம்..
ஏன் அவர்
ப்ளட் பிரஷரைக்
கூட்டி விட வேண்டும்?

மீண்டும் கேட்டால்
புதிய ப்ராஜக்டில்
அதிக வேலை
என்ற பொய்..

இன்னொரு சொல்ல
விரும்பாத காரணமும்
கூட....


இப்போ இன்னொரு கவுஜ.. நம்ம வழக்கமான சரக்கு ஸ்டைல்ல.. :))


நெரிசலான வைன்ஷாப்பின்
சிறு இடைவெளியில்
கூனி..குறுகி.. புகுந்து

சற்றே கிடைத்த இடத்தில்
நாற்காலியைப் பற்றி
ஆசுவாசம்..

தூரத்து டேபிளில்
பார்த்த முகம்..
நெடுநாள்
பார்க்காத முகமும்
கூட...

ஆருயிர் நண்பன்
அருகில் அழைக்கத்தான்
மனமில்லை

அடுத்த ரூமில்
கள்வனாய் புகுந்து
ஓரத்து டேபிளில் அமர்ந்தேன்

காரணம் ஒன்றும்
பெரிதாயில்லை
மொடா குடியன் அவன்.

பாவம்..
ஏன் அவன்
போதையை இன்னும்
கூட்டி விட வேண்டும்?

வேண்டும் என்று கேட்டால்
இல்லையென்று
மறுக்க முடியாத
இயலாமை..

இன்னொரு சொல்ல
விரும்பாத காரணமும்
கூட....


தண்டோரா அண்ணா கண்டுக்காதீங்க.. :))

Comments

இவ்ளோ சீக்கிரமாவா.............

வர வர நீங்க பெரிய்ய்ய்ய கவுஜராகிட்டே போறீங்க தல....

தொடர்க உங்கள் கவுஜைகளை...

தண்டோரா அண்ணன் மன்னிப்பாராக.
நன்றி அகல் விளக்கு.. :))

Popular Posts