மசாலா மிக்ஸ் - சென்னை சில்க்ஸ் தீபாவளி, மீனாகுமாரி மற்றும் லிட்டில் ஜானி

வனக்கம் நண்பர்களே. ஒரு வாரத்திற்கு பின்பு இன்றுதான் கொஞ்சம் பதிவு எழுத நேரம் கிடைத்தது.. அதான் ஒரு மசாலா மிக்ஸ் எழுதலாம்னு முடிவுபன்னிட்டேன்.

*************************************************


என் நெருங்கிய நண்பனின் அக்காவிற்கு ஐந்து மாதத்திற்கு முன் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையன் படு சுட்டி. ஆனால் அவன் அழுகையை நிறுத்த யாராவது பாட்டு பாடவேண்டுமாம். இப்போ எல்லாம் அவன் அழுகையை நிறுத்த பாடும் பாட்டு "சென்னை சில்க்ஸ் தீபாவளி". நண்பனின் அக்காவும் மாமாவும் மாத்தி மாத்தி இந்தப் பாடலை பாடுகிறார்களாம். இது கூடப் பரவாயில்லை, என் தங்கையின் மகனுக்கு இரண்டரை மாதம் தான் வயதாகிறது. தலைவர் தன் அழுகையை நிறுத்த விரும்பிக் கேட்கும் பாடல் "என் பேரு மீனாகுமாரி" தான். இதைப் பார்த்த என் அம்மா "பையனுக்கு அப்படியே அவன் மாமன் குனம்" என்கிறார்.
ரொம்பத்தான் பப்ளிக்கா ஜொள்ளு விடறோமோ...

*************************************************

சில தினங்களுக்கு முன் படித்த கார்க்கியின் இந்தப் பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நேற்று பேருந்தில் அலுவலகம் சென்றுகொண்டிருந்த போது, பழைய நினைவுகளை அசை போட்டுக்கொண்டிருந்தேன் (லவ் ஃபெய்லியர் ஸ்டோரி தான்). அப்பொழுது என் பக்கத்தில் இருந்தவனது மொபைல் ஃபோன் அலறியது. ரிங்டோன் என்ன தெரியுமா - "மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது, சோகம் கூட சுகமாகும், வாழ்க்கை இன்ப வரமாகும்".

உண்மையாவே கடுப்புகளைக் கிளப்புவதற்கே ரிங்டோன் வைக்கிறாங்க போல...

*************************************************
கொஞ்ச நாட்களுக்கு முன் ஹைவேய்ஸில் தொன்னூரு கிலோமீட்டர் வேகத்தில் காரில் சென்றுகொண்டிருந்தோம். திடீரென லுங்கி கட்டிய ஒருவன் சைக்கிலைத் தள்ளிக்கொண்டு ரோட்டைக் கிராஸ் செய்தான். சற்றும் எதிர்பாராத சமயத்தில் அவன் லுங்கி அவிழ, படுபாவிப் பய உள்ளார ஜட்டிகூட போடலை. நல்லவேளை சரியான சமத்தில் அவன் லுங்கியைப் பிடிக்க நாங்களும் பிரேக்கை அமுக்க, உயிரா மானமா என்ற போராட்டத்தில், உயிர்தான் என அவன் ஓட்டமாய் ரோட்டைக் கிராஸ் செய்துவிட்டான். குபீர் என எங்களுக்கு சிரிப்பு வந்துவிட்டாலும், அடுத்து நாங்கள் சொன்ன வார்த்தை "சே பாவம்". என்ன கொடுமை சார் இது...
*************************************************

பெங்களுர் டிராஃபிக் போலீஸிற்கு ப்ளாக்பெர்ரி கொடுத்துவிட்டார்கள் என போன மசாலா மிக்ஸில் தெரிவித்திருந்தேன். இப்போ கூடவே கேனான் கேமராவும், சிலருக்கு ஹாண்டி கேமராவும் கொடுத்திருக்கிறார்கள். ஃபிகர்களைப் படம் பிடிக்காமல் ஒழுங்கா டிராஃபிக்கை சரி செய்தால் சரி...
*************************************************

இப்போ எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு அசைவ வகை ஜோக். உங்களில் பலருக்கு லிட்டில் ஜானி என்ற கேரக்டரைத் தெரிந்திருக்கலாம். பத்து வயது கூட ஆகாத சின்னப்பையன், ஆனால் பிஞ்சிலேயே பழுத்த படவாப் பயல் அவன்.

ஒருநாள் அவனின் டீச்சர் அவனிடம் ஒரு கேள்வி கேட்டார். "ஜானி ஒரு மரத்தில் ஐந்து காகம் உட்கார்ந்திருக்கிறது. ஒரு காகத்தை மட்டும் சுட்டு விட்டால் மீதம் எத்தனை". ஒன்று கூட இருக்காது மிஸ் என்றான் லிட்டில் ஜானி. எப்படி என டீச்சர் கேட்க, சத்தம் கேட்டு அனைத்தும் பறந்து விடும் என்றான். தவறு, மீதம் நான்கு காகம் இருக்கு. ஆனால் உன் கற்பனையை நான் வியக்கிறேன் என்றார் டீச்சர்.

பதிலுக்கு தலைவர் டீச்சர் நான் ஒரு கேள்வி கேட்கவா என்றான். சரி என்றார் ஆசிரியை. "ஒரு ஐஸ்கிரீம் கடையில் மூன்று பெண்கள் கோன் ஐஸ் வாங்கி சாப்பிடுகிறார்கள். ஒருவர் ஐஸை கடித்துத் தின்கிறார். ஒருவர் நக்கி சாப்பிடுகிறார். ஒருவர் கோன் ஐஸை அவர் வாயுக்குள் நுழைத்து சாப்பிடுகிறார், இவர்களில் யாருக்கு கல்யாணம் ஆகியிருக்கும்" என கேள்விக்கனையை தொடுக்க, தடுமாறிப்போகிறார் ஆசிரியை. சிறிது நேரத்திற்குப் பிறகு, கோன் ஐஸை
வாயுக்குள் நுழைத்து சாப்பிடுபவருக்கு கல்யாணம் ஆகியிருக்கும் என ஆசிரியை கூற, பதிலுக்கு லிட்டில் ஜானி என்ன சொன்னான் தெரியுமா. "இல்லை மிஸ். யார் கையில் திருமண மோதிரம் இருக்கோ அவங்களுக்குத் தான் கல்யாணம் ஆகியிருக்கும். ஆனா உங்க சிந்தனையை நான் பார்த்து மிரண்டுவிட்டேன்".

இதைப் பார்த்தா நம்ம கவுண்டர் ஜப்பானில் கல்யானராமன் படத்துல சொல்ற டயலாக் தான் நியாபகத்துக்கு வருது. "உங்க பையனா சார் இவன். இப்படி ஊருக்கு ரெண்டு பையன பெத்து விடுங்க. நாட்டுல வெட்டுகுத்து எல்லாம் சகஜமா நடக்கும்
*************************************************

இப்போ ஒரு மூன்று நாளா தொட்டாச்சினுங்கி படத்துல வர்ற ரம்யா ரம்யா பாட்டை அடிக்கடி கேக்கறேன் (நல்லா கவணிங்கோ கேக்கறேன்). ஏனோ அந்தப் பாட்டோட இசை ரொம்பப் பிடிச்சுபோயிடுச்சு.

Comments

ரசித்தேன் மிக ரசித்தேன்
//"பையனுக்கு அப்படியே அவன் மாமன் குனம்" என்கிறார். ரொம்பத்தான் பப்ளிக்கா ஜொள்ளு விடறோமோ...//

நீங்களுமா?

//உயிரா மானமா என்ற போராட்டத்தில், உயிர்தான் என அவன் ஓட்டமாய் ரோட்டைக் கிராஸ் செய்துவிட்டான். //

யாரோட உயிர். பாத்துண்டு இருக்குறவங்க உயிரா

//இப்போ கூடவே கேனான் கேமராவும், சிலருக்கு ஹாண்டி கேமராவும் கொடுத்திருக்கிறார்கள். ஃபிகர்களைப் படம் பிடிக்காமல் ஒழுங்கா டிராஃபிக்கை சரி செய்தால் சரி//

சரி.. சரி..

//இப்போ எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு அசைவ வகை ஜோக்.//

நமக்கு இது அலர்ஜி தல.

//ரம்யா ரம்யா பாட்டை அடிக்கடி கேக்கறேன் (நல்லா கவணிங்கோ கேக்கறேன்)//

நாங்களும் நீங்க சொல்றத கேட்டுட்டுட்டுதான் இருக்கோம்.

---------------------------------

மசாலா மிக்ஸ் கலக்கல்ஸ் தல.
நன்றி நேசமித்ரன்.. :))
நன்றி அகல்விளக்கு...

நீங்களுமானா, வேற யாரு இப்படி?? :))

எனக்கு அசைவ ஜோக்ஸ் கொச்சையா இருந்தா பிடிக்காது.. ;)
நல்ல பாட்டு சகா அது.. நேத்து ட்ராய் படம் பார்த்துட்டு இருந்தேன்.. அதுல் அக்கிலீஸ் கேரக்டர் பார்த்து உங்க ஞாபகம் வந்து, காலைல வந்தவுடனே உங்க பிளாக திறந்து பார்த்தா, என் பேரு..

அதாவது, என் பேரு மீனாகுமாரி சாங் :))
பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி கார்க்கி. உங்களோட புட்டிக்கதைகள் பற்றியே ஒரு பதிவு எழுதனும். அவ்வளவு அருமை அனைத்துக் கதைகளும்.

//நேத்து ட்ராய் படம் பார்த்துட்டு இருந்தேன்.. அதுல் அக்கிலீஸ் கேரக்டர் பார்த்து உங்க ஞாபகம் வந்து, காலைல வந்தவுடனே உங்க பிளாக திறந்து பார்த்தா, என் பேரு..//

கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்குங்க... நன்றி. :))

அந்தப் பாட்டு உங்களுக்கும் ரொம்பப் பிடிக்குமோ.. ;)

Popular Posts