நமக்கு தீபாவளி, அப்போ மற்ற நாட்டவர்களுக்கு???


அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


நாம் நரகாசுரனை அழித்த தினமாக தீபாவளியைக் கொண்டாடுகிறோம். வட இந்தியாவில் சிலர் ராமர் தனது பதினான்கு வருட வனவாசத்தை முடித்துவிட்டு திரும்பும் தினமாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். ஜைன மதத்தில், மகாவீரர் முக்தி அடைந்த தினமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். சீக்கியர்கள் வேறு ஒரு காரணத்திற்காக கொண்டாடுகிறார்கள். இப்படி பல காரணங்கள் இருந்தாலும், அனைவரும் தீபாவளியை பட்டாசு வெடித்து, விளக்கு ஏற்றி இதனை ஒளிகளின் பண்டிகையாய் கொண்டாடுகிறோம்.


நமக்கு இப்படி ஒளிகளின் பண்டிகையாய் தீபாவளி. மற்ற நாட்டில் எப்படி கொண்டாடுகிறார்கள் என்று பார்ப்போமா?

யூதர்கள் ஹானக்கா என்று ஒளிகளின் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இந்தப் பண்டிகையை அவர்கள் சிறப்பு வகையான மெழுகுவர்த்தி ஏற்றி, பட்டாசு வெடித்து, சில சிறப்பு உணவுவகைகளைச் சமைத்து கொண்டாடுகிறார்கள். கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் அவர்களது கோவிலைப் புதுப்பித்த தினமாக யூதர்கள் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். நவம்பர் மாத இறுதியில் எட்டு தினங்களுக்கு இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


அதேபோல் சீனர்கள், லாந்தர் பண்டிகை என்ற பெயரில் ஒளிகளின் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். சீனப் புதுவருடம் முடிவுபெருவதைக் கொண்டாடும் விதமாக அவர்கள் இந்தப் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இந்த சமயங்களில் அவர்கள் வண்ணமயமான லாந்தர்களை ஏந்திச் சென்று கோவில்களில் பூஜைகள் நடத்துவார்கள். அதன்பின் பட்டாசு, வானவேடிக்கைகள் என பண்டிகை ஜோராக நடக்கும்.


இதேபோல் பாரசீகத்தில், ப்ரான்ஸில், என பல நாடுகளில் ஒளிகளின் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

இந்த தீபாவளியில் அனைவரும் நல்ல ஆரோக்கியமும், வளமும் பெற்று வாழ நான் மனமாற இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Comments

மிக நல்ல பயனுள்ள பகிர்வு நண்பா என் கவிதைக்கு கொஞ்சம் எருபொருளும் கிடைத்தது
நன்றி நேசமித்ரன்.. :))

உங்கள் கவிதைகள், கதைகள் எல்லாமே அருமை..:))

Popular Posts