மசாலா மிக்ஸ் 07 Oct 2009 - ட்ராஃபிக் கான்ஸ்டபிளின் பிளாக்பெரியும், 20 ரூபாய் கடன் கேட்ட பிராஜக்ட் மேனேஜரும்


இன்னைக்கு காலைல பி.எம்.டி.சி வால்வோ பஸ்ல ஆபீசுக்கு வந்தேன். பக்கத்து சீட்ல 30-32 வயசு மதிக்கத்தக்க ஒரு டெக்கி. அவரு கைல லேப்டாப், பைல ப்ளாக்பெரி'னு பார்க்கறதுக்கு என்னோட பழைய ப்ராஜக்ட் மேனேஜர் மாதிரியே இருந்தாரு. உண்மையிலேயே அவரு ஒரு ப்ராஜக்ட் மேனேஜருங்கறது அப்புறமா அவரு பேசின ஸ்டைல்'லயே தெரிஞ்சுபோச்சுங்கறது வேற விஷயம். இப்போ மேட்டருக்கு வருவோம். பஸ் டிக்கட் விலை 20 ரூபாய். நான் டிக்கட் வாங்கிட்டேன். பாவம் அந்த மனுஷன் பர்ஸ்'ல தேடுறாரு, லேப்டாப் பேக்குல தேடுறாரு.. ம்ஹூம்.. ஏழு ரூபாய் சில்லரை தவிற ஒரு நாலஞ்சு கிரெடிட் கார்டும், ரெண்டு டெபிட் கார்டும் தான் கிடைச்சுச்சு, ஆனா 20 ரூபாய் பணம் கிடைக்கலை. கண்டக்டர் கிட்ட ATMல பணம் எடுத்துகுடுத்துடுறேன்னு சொல்லிப்பார்த்தும் ஒன்னும் பிரயோஜனமில்லை. திடீர்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத நேரத்துல, என்கிட்ட, ஒரு 20 ரூபாய் இருந்தா குடுங்க. கீழே இறங்கின உடனே ATMல பணம் எடுத்து குடுத்துடுறேன்னு சொன்னாரு. என்கிட்ட 100 ரூபாயாத்தான் பணம் இருந்துச்சு. அதுமட்டுமில்லாமல், அவரு இறங்குற இடம் வேற, நான் இறங்குற இடம் வேற. அதனால நான் என்கிட்ட சேஞ்ச் இல்லைனு சொல்லிட்டேன். (உள்ளுக்குள்ள இவருக்கு ஹெல்ப் பன்னாம இப்படி பன்னறோமேனு கொஞ்சம் கஷ்டமாவும் வெக்கமாகவும் இருந்துச்சு.. ஆனா அவரு என் பழைய ப்ராஜக்ட் மேனேஜர் மாதிரி இருந்ததாலதான் ஹெல்ப் பன்னலைங்கறது வேற விஷயம்). நல்லவேளை. பக்கத்து சீட்டு புன்னியவான் தன்கிட்ட இருந்த 20 ரூபாயைக் குடுத்து காப்பாத்திட்டார். அதில்லாம அவங்க ரெண்டு பேரும் ஒரே ஆபீஸ்ல வேலை பார்க்குறாங்க. அவருக்கு பணத்தை திருப்பி கொடுக்கறதும் ஈசி. என்ன ஆனாலும் அதுக்கப்புறம் அவரைப் நேருக்கு நேர் பார்க்க கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. வுட்ரா வுட்ரா சூனா பானா...பிளாக்பெரி, லேப்டாப், வால்வோ பஸ்ஸின் ஏசி பயனம் என அனைத்தும் இருந்தது அவருக்கு, ஆனால் பாவம் "NO PEACE OF MIND".

*************************************************

பிளாக்பெரி'ன்னதும் இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் நினைவுக்கு வருது. நேத்து நான் ஃபோரம் மால்'ல இருக்குற பி.வி.ஆர் சினிமாஸ்'ல "இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்" படம் பார்க்க போனேன். தியேட்டர் பக்கத்துல இருக்குற டிராஃபிக் சிக்னல்ல நின்ன கான்ஸ்டபிள் பிளாக்பெரி வெச்சுருந்தாரு. உடனே நம்ம மைண்ட்ல என்ன தோனும். "மனுஷன் செம வசூல்ராஜா போல"னு நெனச்சுகிட்டு படம் பார்க்க போயிட்டேன். இன்னைக்கு காலைல கூகுள்'ல தேடிப்பார்த்தாதான் உண்மை வெளங்குது. பெங்களூர் டிராஃபிக் போலீசுக்கு டிபார்ட்மெண்ட் ஏர்டெல் பிளாக்பெரி போன் குடுத்துருக்காங்க. இந்த போன் வயர்லெஸ் பிரிண்டரோட கனக்ட் ஆகியிருக்கும். டிராஃபிக் ரூல்ஸ்'ஸ மதிக்காதவங்களுக்கு, உடனே ஸ்பாட் ஃபைன் போட்டு, அங்கேயே பில்ல பிரிண்ட்அவுட் எடுத்து குடுத்தற்றாங்க. அதுமட்டுமல்லாமல், இந்த பிளாக்பெரி ஒரு காமன் சர்வரோட கனக்ட் பன்னிருக்காங்க. அதனால, ஃபைன் கட்டின அத்தனை பேரோட டீடெய்லும் சர்வர்ல பதிவாகி இருக்கும். அடுத்தமுறை நீங்க மாட்டினா ஃபைன் டபுள் ஆகும். எப்புடீ...

ஹைடெக் சிட்டியின் ஹைடெக் போலீஸ். சூப்பர் சார்.

*************************************************

திங்கள்கிழமை காலைல ஊருல இருந்து வரும்போது தர்மபுரி பக்கத்துல ஒரு பெரிய ஆக்சிடெண்ட். ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் நடந்த விபத்து அது. ஒரு கே.பி.என் பஸ்ஸும், லாரியும் மோதி ஐந்து பேர் பலியாகிவிட்டார்கள். பெங்களூரை விட்டு தமிழ்நாடு பார்டர் வந்தவுடனே ரோடு சும்மா சூப்பரா போட்டுருக்காங்க. கரூர் வரைக்குமே கட்டிண சாலை தான். சேலம் தவிர வேரெந்த ஊருக்குள்ளும் போகத்தேவையில்லை. ஸ்பீட் பிரேக்கர் இல்லை. டிராஃபிக் சிக்னல் இல்லை. கடைசி வரைக்கும் ஒன்வே. 50 நபர்கள் கொண்ட ஊருக்கும் கூட ஒரு மேம்பாலம், என எல்லா வசதியும் கொண்ட இந்த சாலையின் ஒரே பிரச்சனை, இதில் போகும் பெரும்பாலான ஓட்டுனர்களுக்கு சாலை விதிகள் பற்றித் தெரியவில்லை. இடதுபுறம் சைடு வாங்குதல், இண்டிகேட்டர் போடாமல் திடீரென திரும்புதல், சராசரியாக 120-130 கி.மி வேகத்தில் வண்டியை செலுத்துதல் என அத்தனையையும் தப்புத்தப்பாக செய்தால் விபத்துகளை தவிர்ப்பது இயலாத காரியம்.

முப்பது நிமிடம் முன்னமாக சென்றுவிடலாம் என வண்டியை வேகமாக ஓட்டிச்சென்று விபத்துக்குள்ளாகி, முப்பது வருடம் முன்னமாகவே பரலோகம் சென்றுவிடுகிறார்கள். R.I.P.

*************************************************


போனவாரம் 10 நாட்கள் விடுப்பில் சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். இங்கே பெரும்பாலும் இண்டர்நெட்டில் இருந்துவிட்டு, ஊருக்கு போய் இண்டர்நெட் இல்லாமல் செம போர். வேறு வழியில்லாம ஸ்பைடர் சாலிடைர் கேம் விளையாட ஆரம்பித்தேன். சிறிது நேரத்திலேயே அந்த கேமுக்கு அடிக்ட் ஆகிவிட்டேன். உண்மையிலேயே இந்த கேம் டாப் டக்கர்.

*************************************************

டிஸ்கி: இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் படத்தைப்பற்றி ஒரு விமர்சணம் கூடிய விரைவில்.

And for now, நண்பர்களே பதிவைப் படித்துவிட்டு மறக்காமல் பின்னூட்டமிடுங்கள். நன்றி.

Comments

நன்றி துளசி கோபால்.. :)
ச்வாரச்யமா போகுது பாஸ் பதிவு நல்ல கலவை தி கிளப் காக் டெய்ல் மாதிரி
நன்றி நேசமித்ரன்.. :)
ஹலோ..அன்றைக்கு என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தது, நீங்கள் தானா ?. உண்மையாகவே உங்களிடம் பணம் இல்லை என நினைத்திருந்தேன் :(
கலாய்க்காதீங்க தல.. :(

அப்புறம் நான் அழுதுடுவேன்... :(
என்னுடைய இந்தப் பதிவு தான் தமிலிஷ்'ல் பாப்புலர் ஆகி பப்லிஷ் ஆகியிருக்கும் முதல் பதிவு. இந்தப் பதிவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. :)
வனம் said…
வணக்கம்

\\ஹைடெக் சிட்டியின் ஹைடெக் போலீஸ்.\\

உண்மையிலேயே மிகவும் நல்ல விடயம்

இராஜராஜன்
கண்டிப்பாக இது ஒரு வரவேர்க்கத்தக்க விஷயம். நன்றி வனம். :)
நன்றி கார்த்திகைப் பாண்டியன் :))

Popular Posts