Thursday, September 24, 2009

Up - திரை விமர்சனம்

அணிமேஷன் படங்கள் எல்லாம் குழந்தைகளுக்காக என்னும் மனப்பான்மை உடையவர்களா நீங்கள்? ஆம் என்றால், பிக்ஸார் அணிமேஷன் ஸ்டூடியோஸ் (Pixar Animation Studios) தயாரித்த படங்களான Toy Story, Monsters Inc, Finding Nemo, The Incredibles, Cars, Ratatouille, WALL-E போன்ற படங்களை அட்லீஸ்ட் ஒருமுறையாவது பார்த்துவிடுங்கள். உங்களின் எண்ணத்தை கண்டிப்பாக மாற்றிக்கொள்வீர்கள். அணிமேஷன் படங்களுக்கு புதிய பரிமாணத்தை வழங்கியதே பிக்ஸார் ஸ்டூடியோஸ் என்றால் அது மிகையாகாது. அணிமேட்டட் படங்களுக்கான 8 ஆஸ்கார் விருதுகளில், 4 விருதுகள் பிக்ஸார் படங்கள் வாங்கிவிட்டது என்பதே இந்த நிறுவணத்தின் வெற்றிக்கு சான்று. இதோ ஐந்தாவது ஆஸ்கார் விருதைத் தட்டிச்செல்ல அவர்களின் அடுத்த படைப்பான "Up" வெளிவந்துவிட்டது.

ஒரு வயசான தாத்தா, ஒரு வாயாடி குட்டிப்பையன், ஒரு பயந்தாங்கொள்ளி நாய், மயில் மாதிரி கலர் கலரா இருக்கிற ஒரு பறவை, அப்புறம் ஒரு வில்லன் எக்ஸ்ப்ளோரர் (எக்ஸ்ப்ளோரர்'க்கு தமிழ்'ல என்னன்னு தெரிலைபா). இவிங்கதான் படத்தோட முக்கிய கதாப்பாத்திரங்கள். இப்ப படத்தோட கதையைப் பார்ப்போம்.

கார்ல் ப்ரெட்ரிக்ஸன் (Carl Fredrickson) என்ற சிறுவன் தன் சின்ன வயசிலிருந்தே சார்ல்ஸ் மண்ட்ஸ் (Charles Muntz) என்ற எக்ஸ்ப்ளோரரின் பரம விசிறி. எதேச்சையாக அவன் எல்லி (Ellie) என்ற சிறுமியை சந்திக்கிறான். அவளுக்கும் சார்ல்ஸ் மண்ட்ஸ் என்றால் அலாதி பிரியம். இவங்க ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ் ஆகிடுறாங்க. நட்பு காதலா மாறுது, காதல் கல்யானத்தில் முடியுது. ஆனா அவங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லைனு தெரிய வரும்போது எல்லி மனமுடைஞ்சு போறாங்க. அதன்பின் தான் அவங்க சின்ன வயசிலருந்தே ஆசைப்பட்ட பாரடைஸ் நீர்வீழ்ச்சியின் (Paradise Falls) மேல் ஒரு வீடு கட்டனும்'ங்கர ஆசையை நிறைவேத்த, காசு சேர்க்க ஆரம்பிக்கிறாங்க. பல காரணங்களால் பணம் செலவாக, அவங்களுக்கும் வயசாக, கடைசில ஒருநாள் எல்லி இறந்துபோறாங்க.

அதேநேரம் காலமாற்றத்தால, கார்ல் வீட்டுக்கு பக்கத்துல பெரிய கட்டுமானப்பணி நடந்துவருது. இவரு வீட்ட காலி பன்ன பல முயர்ச்சிகள் நடந்தாலும், எதுவும் எடுபடாமல் போகுது. அந்நேரம் கார்ல் எதேச்சையாக ஒருவரை காயப்படுத்திவிட, அவரை ஊருக்கு வெளிய இருக்கிற Retirement Village'க்கு அனுப்ப கோர்ட் உத்தரவிடுறாங்க. அப்போதான் நம்ம சூப்பர் தாத்தா பல்லாயிரம் பலூன கட்டி தன் வீட்டைத் தூக்கி, அதிலேயே பாரடைஸ் நீர்வீழ்ச்சிக்கு பயனிக்க ஆரம்பிக்கிறாரு. கொஞ்ச நேரத்துக்கப்புறம்தான் அந்த பறக்கற வீட்டுல இவர்மட்டுமல்லாம, ரஸ்ஸல் (Russell) என்கிற குட்டிப்பையனும் இருக்கான்னு தெரியவருது. ரஸ்ஸல் ஏற்கனவே கார்ல்'ல சந்திச்சிருக்கான். ரொம்ப வாயாடிப் பையன். இவங்க ரெண்டு பேரும் எதேச்சையாக பாரடைஸ் நீர்வீழ்ச்சிக்குப் பக்கத்திலேயே பறந்துவந்து மாட்டிகிறாங்க.

பறக்கற வீட்டை நடந்துபோயே நீர்வீழ்ச்சிக்கு மேலே வெச்சுறலாம்னு, நடக்க ஆரம்பிக்க, ரஸ்ஸல் கெவின்'னு (Kevin) ஒரு கலர் பறவையை கூட்டிட்டு வர, அந்த பறவையை தேடிக்கிட்டு எலக்ட்ராணிக் வசதியால் பேசும் சக்திபெற்ற நாய்கள் துரத்திகிட்டு வர, படம் சூடு பிடிக்க ஆரம்பிக்குது. ஒருகட்டத்தில் கெவினை காப்பாற்றுவேன், என் கார்ல் ரஸ்ஸலுக்கு சத்தியம் செய்து கொடுக்கிறார். டக் (Dug) என்ற பயந்தாங்கொள்ளி நாய், கார்ல்'லை எஜமானராக பாவிக்க ஆரம்பிக்குது. கெவினைத் தேடி வந்த நாய்கள், இந்த நால்வரையும், அவர்களின் எஜமானரிடம் அழைத்துச் செல்கிறது. எஜமானர் வேறு யாருமில்லை, நம் சார்ல்ஸ் மண்ட்ஸ் தான்.

மண்ட்ஸ், தான் ஒரு போலி இல்லைனு நிரூபிக்க, கெவினைப் பிடிக்கப்பாக்குறாரு. ஒரு கட்டத்துல, கார்ல்'லோட வீட்டுக்கும் தீ வெச்சுடுறாரு. கார்ல் தன்னோட வீட்டை பாரடைஸ் நீர்வீழ்ச்சி மேல அமர்த்தினாரா?, கெவினைக் காப்பாத்தினார? என்பது தான் இறுதிக்கதை.
படத்தின் சிறப்பம்சமே அணிமேஷன் தான். ஒவ்வொரு காட்சிகளும், கண்களுக்கு பொக்கிஷமாகவே அமைந்திருக்கிறது. தவிர சில இடங்கள்'ல இது அனிமேஷனா இல்லை ரியலா'ன்னு சந்தேகமே வந்துவிடுகிறது. அதுவும் இந்தப் படத்தை 3D'ல் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக தவரவிட்டுவிடாதீர்கள். எனக்குத்தான் அந்த வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. :(

அதேபோல் ஒவ்வொரு கேரக்டரும் அருமை. எனக்கு ரஸ்ஸலை மிகவும் பிடித்துப்போய்விட்டது. அவன் சொன்ன இந்த டயலாக், மனதை என்னவோ செய்துவிட்டது - "I know this may seem boring, but I think the boring stuff is what I remember the most". டக் என்ற நாயிடம் ஸ்பீக் என்றவுடன் "Hello" என நாய் பேசும் காட்சி, அவர் எவரஸ்டைச் சுற்றி வந்தார் என வரும் காட்சி, என பல இடங்களில் குபீர் என சிரிப்பு வந்துவிடுகிறது.

நான் இந்தப் படத்தை நேற்று இரவு ஒருமுறை பார்த்துவிட்டேன். மறுபடியும் ஒருமுறை பார்க்கவேண்டும். உங்களுக்கும் சொல்கிறேன், இந்தப் படத்தை அட்லீஸ்ட் ஒருமுறையாவது பார்த்துவிடுங்கள். இதுபோன்ற படங்கள் எல்லாம் கண்டிப்பாக "MUST WATCH AND DON'T MISS".

4 comments:

KingMaker said...

partner...theater ku pogamalaye padam paartha madhiri irukku..kandippa chance kidaicha indha padathtahi naan paakurren...

Achilles/அக்கிலீஸ் said...

நன்றி பார்ட்னர்.. :)

நையாண்டி நைனா said...

Nalla irukku.... Nanba.

Paarkiren.

Achilles/அக்கிலீஸ் said...

நன்றி நைனா... :))