ஸ்பீல்பெர்க்கும் மணிரத்னமும் - சில ஒற்றுமைகள்
ஹாலிவுட் டைரக்டர்களில் எனக்கு மிகவும் பிடித்த, என்னைப் பெரிதும் கவர்ந்த டைரக்டர் என்றால் அவர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் தான். பீட்டர் ஜாக்ஸன், மார்ட்டின் ஸ்கோர்ஸீஸ், மைக்கேல் பே, ராபர்ட் ஜெமிக்கிஸ், ரிட்லி ஸ்காட் போன்றோர்களது படங்களையும் பெரிதும் ரசித்துப் பார்த்திருந்தாலும், ஸ்பீல்பர்க் அளவிற்கு என்னை எந்த ஹாலிவுட் டைரக்டர்களும் இந்நாள்வரைக் கவரவில்லை. நான் முதன் முதலில் பார்த்த ஆங்கில திரைப்படமான "Indiana Jones and the Last Crusade" கூட ஸ்பீல்பர்க் அவர்கள் இயக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட்டில் ஸ்பீல்பர்க் எப்படியோ அதுபோல் கோலிவுட்டில் என்னைப் பெரிதும் கவர்ந்த இயக்குனர்கள் மணிரத்னமும், ஷங்கரும் தான். இவர்கள் இருவருக்கும், கதை சொல்லும் திறன் இயற்கையாகவே அமைந்திருக்கிறது எனக் கூறலாம். இப்பொழுது கொஞ்ச காலமாக, மணிரத்னத்தின் படங்களைச் சற்று கூர்ந்து கவனிக்கும் போது, ஸ்பீல்பெர்க் மற்றும் மணிரத்னத்தின் டைரக்டிங் ஸ்டைல், திரைக்கதை அமைப்பு, தீம், போன்றவைகளில் பல ஒற்றுமைகளைப் பார்க்கிறேன்.
இதோ அவற்றில் சில ஒற்றுமைகள். இது முழுக்க முழுக்க எனது சொந்தக் கருத்து. இதில் ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால், பின்னூட்டம் இடுங்கள்.
1. குழந்தைகள்
ஸ்பீல்பெர்க் படங்களில், குழந்தைகள் அல்லது சிறுவர்களுக்கு என்றே சில முக்கியமான காட்சிகள் படத்தில் இருக்கும். உதாரணம்: Duel படத்தில் பள்ளிக்குழந்தைகள் வாகனம் பழுதடைந்து நிற்கும் காட்சி, Jaws படத்தில் பல குழந்தைகள் கேரக்டர், Close Encounters of the Third Kind, E.T, Jurassic Park படங்கள் எல்லாம் குழந்தைகள் சப்ஜெக்ட், Empire of the Sun படத்தில் வரும் சிறுவன், Schindler's List படத்தில் வரும் சிவப்பு கவுன் அணிந்த சிறுமி, A.I: The Artificial Intelligence படத்தின் முக்கிய கதாப்பாத்திரம், என பல உதாரணங்களைக் கூறலாம்.
அதேபோல் மணிரத்னத்தின் படங்களிலும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதைக் காணலாம். அஞ்சலி, கன்னத்தில் முத்தமிட்டால், பாம்பே போன்ற படங்களில் குழந்தைகளும் முக்கிய கதாப்பாத்திரம். தளபதியில் ரஜினியின் வளர்ப்பு மகள், நாயகன் படத்தில் கமலின் சிறுவயது ஸீக்குவன்ஸ், ரோஜா படத்தில் மதுமிதாவின் கிராமத்தில் வரும் குழந்தை, மெளன ராகம் படத்தில் ரேவதியின் தங்கைகள் என இவரின் படங்களிலிருந்தும் பல உதாரணங்களைக் கூறலாம்.
2. நடிகர்கள்
ஸ்பீல்பர்க் ஒவ்வொறு காலக்கட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட நடிகரை தன் படங்களில் உபயோகப்படுத்துவார். 1970 மற்றும் 1980களில் ரிச்சர்ட் டிரைஃபஸ் (Jaws, Close Encounters of the third Kind, Always), 1980களில் ஹாரிசன் ஃபோர்ட் (Indiana Jones trilogy), பின்னர் டாம் ஹான்க்ஸ் (Saving Private Ryan, The Terminal, Catch Me If You Can), 2000களில் டாம் க்ரூஸ் (Minority Report, War of the Worlds) என்று அவர் ஒரு குறிப்பிட்டக் காலக்கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நடிகரை தன் படங்களுக்கு உபயோகப்படுத்துவார்.
அதேபோல் மணிரத்னமும் 1980களில் கார்த்திக் (மெளன ராகம், அக்னி நட்சத்திரம்) மற்றும் பிரபு (அக்னி நட்சத்திரம், அஞ்சலி), 1990களில் அரவிந்த் சாமி (தளபதி, ரோஜா, பாம்பே) பின்னர் 2000களில் மாதவன் (அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து, குரு) மற்றும் அபிஷேக் பச்சன் (யுவா, குரு) என ஒரு குறிப்பிட்ட நடிகரையே பயன்படுத்துகிறார்.
3. கதை
பெரும்பாலான ஸ்பீல்பெர்க் படங்கள் சைன்ஸ்ஃபிக்சன் (E.T, A.I, Jurassic Park, Close Encounters of the third Kind, Minority Report, War of the Worlds) என்றாலும், அவருடைய பல படங்கள் போர் (Always, Empire of the Sun, Schindler's List, Saving Private Ryan, Amistad), அடிமைத்தனம் (Amistad, The Color Purple), பயோபிக் எனப்படும் ஒருவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய படம் (Schindler's List, Catch Me If You Can), உண்மைச்சம்பவங்களை அடித்தளமாக கொண்ட கதை (Munich, The Terminal, Saving Private Ryan) என ஏராளமான சப்ஜெக்டை அவர் தொட்டிருக்கிறார். இதுபோன்ற படங்களை எடுக்க ஹாலிவுட்டில் நிறைய இயக்குனர்கள் இருந்தாலும், ஸ்பீல்பெர்க் தனி முத்திரை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவர் படங்களில் தந்தை-மகன் செண்டிமெண்ட் பல படங்களில் அமைந்திருக்கும். எல்லா படங்களும் பாஸிடிவ் எண்டிங்'ஆக இருக்கும்.
போர் (ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால், தில் சே), உண்மைச்சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படங்கள் (பாம்பே, இருவர்), ப்யோபிக் (இருவர், நாயகன், குரு), சமூகக் கருத்துக்கள் (ஆய்த எழுத்து) போன்ற தீம்'களை வைத்து படம் பன்னும் ஒரே தமிழ் இயக்குனர் மணிரத்னம் என்று கூறலாம். எனக்குத்தெரிந்து வேறு எந்த தமிழ் இயக்குனரும், இது போன்ற கருத்துக்களை வைத்து படங்கள் எடுப்பதில்லை.
4. இசை
ஸ்பீல்பெர்க் படங்களில் The Color Purple படத்தைத் தவிற மற்ற அனைத்துப் படங்களிலும் அவர் இசையமைப்பாளர் ஜான் வில்லியம்ஸ்'ஐப் பயன்படுத்தியிருப்பார். ஜான் வில்லியம்ஸ் E.T., Jaws, Schindler's List படங்களுக்கு, சிறந்த இசைக்கான ஆஸ்கார் விருது பெற்றார். ஸ்பீல்பெர்க்குடன் பனியாற்றிய 22 படங்களில், 10 படங்களுக்கு அவர் சிறந்த இசைக்கான ஆஸ்கார் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னமும் ரோஜா படத்திற்கு முன்பு வரை இளையராஜா அவர்களோடு பணியாற்றினார். தற்பொழுது ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றுகிறார். மணிரத்னம் படங்களில் இசைக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். மெளன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்கள் எல்லாம் தமிழ் திரைப்பட இசைக்கு முத்தான எடுத்துக்காட்டுகள்.
டிஸ்கி: இவை எல்லாம் ஒரு சில ஒற்றுமைகள் தான். Jaws, Saving Private Ryan படங்கள் பார்த்தீர்களா? அதில் கேமரா நீரில் மூழ்கி எழுந்து, தத்தளிப்பவர் ஒருவரின் பார்வையில் காட்சிகளைப் பார்ப்பது போல் படமாக்கியிருப்பார் ஸ்பீல்பெர்க். அதேபோல் ஆய்த எழுத்து படத்தில், Hey Goodbye Nanba பாடலை படமாக்கியிருப்பார் மணிரத்னம். இந்த ஒற்றுமைகளால் தான் நாம் மணி சாரை இந்தியாவின் ஸ்பீல்பெர்க் என்று அழைக்கிறோமோ???
Comments
மேலும், மணி மேல்நாட்டு படங்களால் inspire(?) ஆகி படமெடுப்பதை நிறுத்த வேண்டும்.
நீங்க copy'னு சொல்லாம inspire'னு சொல்றீங்க.. :)
மணி சார்கிட்ட நிறைய மேல்நாட்டு படங்களின் பாதிப்பு இருந்தாலும், நம்ம மகாபாரதக் கதை, சத்தியவான் சாவித்திரி கதை போன்றவைகளை கரண்ட் டிரெண்டோட சொல்வதில் கில்லாடி..
எடுக்கும் படங்கள் எதுவும் ஓடியதாக வரலாறே கிடையாது
உங்க பின்னூட்டத்துக்கு நன்றி. :)
மணி காப்பிகேட்!
Vaal.. Repeattte
ஆனால் விழலுக்கு இரைத்த நீரானது.
ஏற்கனவே மணியையும் சக இயக்குனர்களயும் கலாய்கிரார்கள், நீங்க வேறு ஸ்பீல்பெர்கோடு எல்லாம் ஒப்பிடுகிரீகளே?
நன்கு தொடருங்கள்.
உங்க திரைப்பட புலமை மலைப்பூட்டுகிறது.
கோயன் ப்ரதர்ஸ் பற்றியும் கொஞ்ஜம் சொல்லவும்