யோகி - இசை விமர்சனம்
சமீபகாலமாக, யுவனின் இசையமைப்பில் ஒரு தேர்ந்த இசைக்கலைஞரின் மெட்சூரிட்டியையும், மனதைவருடும் இசையையும் சில பல படங்களில் காண முடிகிறது. முக்கியமாக அவர் இசையமைத்த அமீரின் படங்களான மெளனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற படங்களில் நான் குறிப்பிட்ட அந்த மெட்சூரிட்டியைக் காணலாம். இதோ அமீர்-யுவன் கூட்டனியின் அடுத்த படமான "யோகி"யின் பாடல்கள் வெளிவந்துவிட்டன. அமீரும் யுவனும் இரண்டு வருடங்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று இந்தப் படப் பாடல்களை பதிவு செய்ததாகக் கேள்விப்பட்டேன். இந்தக் கூட்டனியின் பழைய வெற்றியைத்தொடர்ந்து, மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள இந்தப் படப் பாடல்கள், அந்த எதிர்பார்ப்புகளை எல்லாவிதத்திலும் கண்டிப்பாகப் பூர்த்தி செய்யும் என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை.
படத்தில் மொத்தம் ஆறு டிராக் (மூன்று பாடல்கள் + ஒரு ரீமிக்ஸ் பாடல் + இரண்டு தீம் மியூசிக்). பாடல்கள் அனைத்தையும் சினேகன் எழுதியுள்ளார் (இந்தப் படத்திலும் அவர் நடித்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்). யுவன் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.
யோகி யோகிதான் பாடல் ஆரம்பிதவுடனே துள்ளல் இசையில் நம்மைக் கவர்ந்துவிடுகிறது. பிளாஸே'வும் நேஹா பஷினும் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். மிதமான டிரம்ஸ் பின்னனியுடன், யோகியின் அருமை பெருமைகளை தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளில் பறைசாற்றும் இந்தப் பாடல், ஸ்டைலான இசையுடன் ரொம்ப சூப்பராகவே இருக்கிறது.
யாரோடு யாரோ - இந்தப் பாடலை யுவனும், உஸ்தாத் சுல்தான் கானும் பாடியுள்ளார்கள். யுவன் தனது டிரேட்மார்க் குரலில் நன்றாகவே பாடியுள்ளார். கேட்டவுடன் பிடித்துப் போகும் இசை, அற்புதமான லிரிக்ஸ், மற்றும் இடை இடையே வரும் உஸ்தாத் சுல்தான் கானின் ஹம்மிங், என சகலமும் சூப்பராக இருக்கும் இந்தப்பாடல் தான் எனது "பிக் ஆஃப் தி ஆல்பம்"
யோகி தீம் (சாரங்கியில்) - யோகி தீம் மியூசிக்கை உஸ்தாத் சுல்தான் கான் சாரங்கி எனும் இசைக்கருவியில் வாசித்திருக்கிறார். நடு நடுவே வரும் உஸ்தாதின் குரலும், தீம் மியூசிக்கோடு கச்சிதமாகப் பொருந்துகிறது. சாரங்கி இசை அப்படியே நம் மனதை வருடுவதுபோல் ஒரு ஃபீலிங். தனிமையில் இருக்கும் போது கேட்டுப்பாருங்கள். மெய் மறந்துவிடுவீர்கள்.
சீர்மேவும் கூவத்திலே பாடல் நம்ம அன்பே சிவம் "நாட்டுக்கொரு சேதி சொல்ல", பருத்திவீரன் "ஊரோரப் புளியமரம்" பாடல்கள் ஸ்டைலில் "மெட்லி" எனப்படும் இசை வகையில் இசையமைத்திருக்கார்கள். சிங்காரச் சென்னை தமிழில், நல்ல காமெடியாகவும், நக்கலாகவும் பாடியுள்ள இந்தப் பாடலை கேட்டவுடனே எனக்குப் பிடித்துப்போய்விட்டது. சூப்பர் யுவன். :)
யோகி தீம் - சில வேளைகளில் புதுப்பேட்டை தீம் மியூசிக்கை நியாபகப்படுத்தினாலும், அற்புதமான இசையமைப்பில் அனைத்து நெகட்டிவ் பாயிண்ட்ஸும் மறைந்து போய்விடுகிறது. எக்ஸலண்ட் யுவன். :)
யோகி யோகிதான் வெர்ஷன் II - இது யோகி யோகிதான் பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷன். இந்தப் பாடலையும் பிளாஸே'வும் நேஹா பஷினும் தான் பாடியுள்ளனர்.
அருமையான லிரிக்ஸுக்காக சினேகனுக்கு ஒரு "ஓ". பாடல்களைப் பாடியவர்கள் அனைவரும், தங்கள் வேலையை கச்சிதமாக செய்ததற்காக அவர்களுக்கு ஒரு "ஓ". அற்புதமான இசைக்காக யுவனுக்கு ஒரு பெரிய "ஓஓஓஓஓஓ". மொத்தத்தில் யோகி பாடல்கள் சூப்பர்.
Comments
அப்பாவோட ஜீன் இல்லாமலா போகும் பையனுக்கு..
அக்கிலீஸ், யோகி தீம் (சாரங்கி) - ஒரு நல்ல சவுண்ட் சிஸ்டம்ல கேட்டுப்பாருங்க .. உங்களுக்குள்ள கண்டிப்பா ஏதோ அதிரும்..
கண்டிப்பா கேட்டுபார்க்கிறேன் பிரசன்னா. :)
பின்னூட்டத்திற்கு நன்றி. :)