நிலை வருமா?


இப்போ iPod-ல உன்னைப்போல் ஒருவன் பாட்டு மட்டும்தான் கேக்கறேன். அதிலும், நிலை வருமா, அல்லாஹ் ஜானே, உன்னைப்போல் ஒருவன் (I'm the new face of Terror) பாட்டு எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு. நிலை வருமா பாட்டை கமல் எழுதி பாடிருக்காரு. அருமை. Simply Superb.

இந்தப் பாட்டுல லிரிக்ஸ், இசை, பாடின விதம் எல்லாமே ரொம்ப அருமையா அமைஞ்சுடுச்சு. மேற்கொண்டு உன்னைப்போல் ஒருவன் பட இசை விமர்சணத்தை இங்கே படிக்கலாம். இப்போ நான் வெகுவும் ரசித்த அந்தப் பாடலின் வரிகளை இங்கே எழுதியிருக்கேன். படித்து ரசிக்கவும். :)


பாடல்: நிலை வருமா
படம்: உன்னைப்போல் ஒருவன்
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ, கமல்ஹாசன்
இசையமைப்பாளர்: ஸ்ருதி ஹாசன்
பாடலை எழுதியவர்: கமல்ஹாசன்
************************************************
போர் செய்யப் புது ஆயுதமும்
ஆள் கொல்லத் தினம் ஓர் சதியும்
நேர்விக்கும் பெறு நாடுகளும்
ஏதென்று நிஜம் உலகறியும்

நின்றே கொல்லும் தெய்வங்களும்
இன்றே கொல்லும் மத பூசல்களும்

நிலை வருமா...நிலை வருமா
நிலை வருமா...நிலை வருமா
உடன் வருமா...உடன் வருமா
தலைமைகள் வர வர திருந்திடுமா...




நின்றே கொல்லும் தெய்வங்களும்
இன்றே கொல்லும் மத பூசல்களும்
ஒன்றே செய்யும் என உணரும்
நன்றே செய்யும் நிலை வருமா

நிலை வருமா...நிலை வருமா
நிலை வருமா...நிலை வருமா
உடன் வருமா...உடன் வருமா
தலைமைகள் வர வர திருந்திடுமா




Comments

Popular Posts