குரங்குக் காய்ச்சல் வந்தாச்சுங்கோ...


பன்றிக் காய்ச்சல் பீதி போய், இப்போது குரங்குக் காய்ச்சல் வந்தாச்சு. ஏதோ ஒரு கொசு கடிப்பதால் இந்த நோய் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். கொஞ்ச வருடத்திற்கு முன் சார்ஸ், ப்ளேக் (Plague) என நோய்கள் வந்து பல உயிரை மாய்த்தது. அதன்பின் தான் பறவைக் காய்ச்சல் வந்துச்சு. அப்புறம் சிக்குன்குனியா (இந்த நோய்க்கும் சிக்கனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கோ), குதிரைக் காய்ச்சல் (2007 ஆஸ்திரேலியா), பன்றிக் காய்ச்சல், குரங்குக் காய்ச்சல் என இருக்கும் விலங்குகள் அனைத்தின் பெயரிலும் (நாய்க் காய்ச்சல், பூனைக்காய்ச்சல் கூட இருக்கிறது), ஒரு காய்ச்சல் வந்துவிட, இதோ இந்த விலங்குகளுக்கும் ஒரு காய்ச்சல் நம் கற்பனை லிஸ்டில் சேர்க்கப்படுகிறது.

1. எருமைக் காய்ச்சல்

இந்த காய்ச்சல் உள்ளவர்கள், எப்பொழுதும் வாயில் அசை போட்டுக்கொண்டே இருப்பார்கள். புன்னாக்கை விரும்பி தின்பார்கள். உடல் வலி அதிகமாக இருந்தாலோ, பசி வந்தாலோ, அம்மாஆஆஆஆ என சத்தமாக குரல் எழுப்புவார்கள். சீக்கிரமாக குணப்படுத்தாவிட்டால், கொம்பு முளைக்கும் அபாயம் உள்ளது.

2. காக்கா காய்ச்சல்

இந்த காய்ச்சல் வந்தவுடன், உடல் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக கருமை நிறத்திற்கு மாறிவிடும். குரலும் கொஞ்சம் கரகரவென மாறி அடிக்கடி கா கா என கத்துவார்கள். எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு சோறு போடாதவனும் கூட இந்தக் காய்ச்சல் வந்தால் பங்கு போட்டுத்தான் சாப்பிடுவான். இந்தக் காய்ச்சல் உள்ள நோயாளிகள் திருடித் திண்பதை பெரிதும் விரும்புவார்கள்.

3. ஆட்டுக் காய்ச்சல்

இவர்களுக்கும் கொம்பு முளைக்கும் அபாயம் உள்ளது. புல் இலை தளைகள் எல்லவற்றையும் விரும்பி சாப்பிடுவார்கள். பல நேரங்களில் சுவர், கம்பம் போன்றவற்றில் தங்கள் உடலை நன்றாக உரசி சொறிந்து கொள்வார்கள். மட்டன் கடையைப் பார்த்தால் மட்டும் மூத்திரம் பேய்ந்துவிடுவார்கள்.

இவையெல்லாம் துக்கடா வகை காய்ச்சல்கள். இப்போது சில ஹை-கிளாஸ் காய்ச்சல்களைப் பார்ப்போம்.

4. சிங்கக் காய்ச்சல்

இந்தக் காய்ச்சல் வந்தவர்கள் குப்புற விழுந்தும் மீசைல மண்ணு ஒட்டலை என்பது போல், காய்ச்சல் வந்த பின்பும், சற்று கம்பீரமாகவே வலம் வருவார்கள். ஆண்களுக்கு ஜடை போல் முடி வளரும் அபாயம் உள்ளது. எப்பொழுது பார்த்தாலும் தூங்கிக்கொண்டே இருப்பார்கள். நோய் தாக்கிய பெண்கள், எப்பொழுது பார்த்தாலும் சமைத்துக் கொண்டே இருப்பார்கள். மாமிசத்தை விரும்பி உண்ணுவார்கள்.

5. சிறுத்தைக் காய்ச்சல்

இந்தக் காய்ச்சல் வந்தவர்கள் பார்க்க நோஞ்சான் போல் இருந்தாலும், வாயில் நுறை தப்பும் வரை செம ஓட்டம் ஓட ஆரம்பித்துவிடுவார்கள். அதேபோல் மரத்திலும் விறுவிறுவென்று ஏறுவதிலும் கில்லாடிகளாக மாறிவிடுவார்கள்.

இவைதவிர வேறென்ன காய்ச்சல்கள் எல்லாம் வரப்போகுதோ. எல்லாரும் மெர்சலாகாம, உடம்ப பத்திரமா பாத்துக்கோங்கோ... வர்ட்டா...

Comments

ஏம்பா பீதிய கிளப்புறீங்க.....
மிருகங்களுக்கு எதுனா மனுஷ காய்ச்சல் வருதா???
//மிருகங்களுக்கு எதுனா மனுஷ காய்ச்சல் வருதா???//

குட் கொஸ்டீன் அகல் விளக்கு... உடனே ஒரு ஆராய்ச்சிய தொடங்கீடுவோம்... :)
KingMaker said…
This comment has been removed by the author.
KingMaker said…
animals ayum vittu vaikkalaya neenga???
சொல்றதை தெளிவா சொல்லுங்க பார்ட்னர்... இதையும் தப்பான அர்த்தத்துல எடுத்துக்கிட்டு கலாய்ச்சிடுவாங்க... :))

Popular Posts