ரூம் போட்டு யோசிப்பாங்களோ...
ரொம்ப நாளாவே எனக்கு கவிதை எழுதனும்னு ஆசை. நாமே ஏதாவது ட்ரை பன்னி பல்பு வாங்கறதுக்கு முன்னாடி, யாராவது எழுதரத பார்த்து ப்ராக்டீஸ் பன்னிக்கலாம்னு ஒரு ஐடியா வந்துச்சு. எங்க ஆஃபீஸ்'ல என் கூட வேலை பார்க்குற அன்புச் சகோதரி கமலி, நான் எழுத ட்ரை பன்னும் முன்னாடியே நானும் கவிதை எழுதரேன் பேர்வழினு ஒன்னு எழுதுனாங்க பாருங்க, இதோ உங்களுக்காக அந்த கவிதை (???!!!)
காலையில் கெளம்பிங்
ஆஃபிஸ்ல சிட்டிங் (sitting)
நெட்'ல சாட்டிங் (chatting)
லன்ச்'ல ஈட்டிங் (eating)
பிரேக்'ல சைட்டிங் (sighting)
ஈவினிங்'ல ஒர்க் எண்டிங்
நைட்'ல ஸ்லீப்பிங்
இதுதான் என் டெய்லி லிவ்விங்
என்ன கொடுமை சார் இது.... ஆனா இதையும் என்னோட நண்பன் ஸ்ரீதர் அழகா திருத்தி எழுதிக்கொடுத்தான்...
காலையில் கிளம்பி
அலுவலில் அமர்ந்து
(இணைய) வலையில் வம்படித்து
உச்சி பொழுதில் உணவு முடித்து
வழி இருந்தால் விழிகளுக்கு விருந்தளித்து
அந்தியிலே அரும்பணி முடித்து
இரவினிலே உறங்கும் இடைவிடாத இயக்கம்
இதுவே என் வாழ்க்கையின் வழக்கம்
உண்மையாவே அருமையா இருக்குதுங்க. அதைப் படித்த பிறகு தான், சாதாரண நிகழ்ச்சியைக் கூட, அழகா கவிதையா எழுத முடியும்'னு நான் உணர்ந்தேன்.
கூடிய சீக்கிரம் நானும் ஒரு கவிதை எழுதுவேன்னு இப்போ இந்த நேரத்துல நான் உறுதி அளிக்கிறேன்.
********************************************
சமீபத்தில் ஒரு பத்து ரூபாய் நோட்டில் படித்த ஒரு வாசகம்.
காதல் என்பது கார் மாதிரி
சிலருக்கு அது Gift'ஆ கிடைக்கும்
ஆனா பலருக்கு அது Lift'ஆ மட்டும்தான் கிடைக்கும்.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க... ரூம் போட்டு யோசிப்பாங்களோ...
Comments
/
காதல் என்பது கார் மாதிரி
சிலருக்கு அது Gift'ஆ கிடைக்கும்
ஆனா பலருக்கு அது Lift'ஆ மட்டும்தான் கிடைக்கும்./
நல்லாருக்கே!!
சரிதான் பட்டைய கெளப்புங்க...
சிலர் அழுவார், சிலர் சிரிப்பார்...
நான்..
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்.
நீங்க எழுதியது கவுஜ!
சிங்கம் களமிறங்கிருச்சுடோய்ய்ய்ய்ய்ய்...
நன்றி நையாண்டி நைனா
நன்றி வால்பையன்
நன்றி ♠ ராஜு ♠
இப்போ இன்னும் தீர்மானமான முடிவ எடுத்துட்டேன்... கவிதை எழுதிட்டு தான் மறுவேலை...