Tuesday, September 8, 2009

பொய்மையெனப்படுவது யாதெனின்


"பொய்மையெனப்படுவது யாதெனின்" என்று சத்தியமா திருவள்ளுவர் எந்தக் குறளும் எழுதவில்லை... அவர் எழுதியது இதைத்தான்...

"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
"

அதன் அர்த்தம்... "வாய்மை என்று கூறப்படுவது எது என்றால் அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்."

திருக்குறளை விட்டுட்டு நம்ம விஷயத்துக்கு வருவோம். பொய்'னா என்னானு நம்ம எல்லோருக்கும் நல்லாவே தெரியும். ஒருத்தங்க பொய் சொல்றாங்க'னு எப்படி கண்டுபிடிக்கிறது. இதோ கீழே இருக்கிற பாயிண்ட்ஸ் எல்லாம், பொய் சொல்றதுக்கான சில அறிகுறிகள்...


  1. பொய் சொல்றவர் எதிரே இருப்பவர் கண்ணப் பார்த்து பேசமாட்டார். அடிக்கடி பார்வை அலைபாயும் (லேடிஸ் காலேஜ் கேட்ல நிக்கிற பசங்க பார்வை மாதிரி).
  2. பேசும் போது குரல்'ல ஒரு மாற்றம் தெரியும். பொய் சொல்லும் போது குரல் மங்கிடும் (ஸ்கூல்'ல பசங்க வாத்தியார கிண்டல் பன்னும்போது குரல் கம்மியாகர மாதிரி).
  3. அவங்க பாடி லேங்குவேஜ்ல ஒரு மாற்றம் இருக்கும். ஏ.சி. ரூமாக இருந்தாலும் அவங்களுக்கு நல்லா வேர்க்கும். கை நடுங்கும்.
  4. சொல்ற விஷயங்களில் முரன்பாடுள்ள கருத்துக்கள் நிறைய இருக்கும்.
  5. பொய் சொல்லும்போது மட்டும் பேச்ச கொஞசம் அடக்கிவாசிப்பாங்க.
  6. அடிக்கடி பேசற சப்ஜெக்ட் மாறும்.
  7. ஒரு மாதிரி விறக்தியான சிரிப்பு சிரிப்பாங்க... (பதிலுக்கு நீங்களும் சிரிச்சா, பொளப்பு சிரிப்பா சிரிச்சிடும்)

இதெல்லாம் கொஞ்சம்தான்.. இன்னும் இந்த மாதிரி நெறைய அறிகுறிகள் இருக்கு. அதெல்லாம் சரி, இப்போ எதுக்கு இதெல்லாம் சொல்றனு சிலர் கேட்கலாம் (ஒரு பயலும் கேக்க போறதில்ல).. அதுக்கு ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.

நான் வேலைக்கு சேர்ந்து ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு முதல் முறையா ப்ராஜக்ட் இல்லாம பெஞ்ச்'ல இருந்தேன் (இந்த டகால்டி தான வேனாங்கறது). அப்போ என்னை ஒரு மொக்கை ப்ராஜக்ட்'ல போட்டானுங்க... நானும் என் டீம்மேட்டும் குடுத்த வேலைய ஒழுங்கா செய்யாம, ஓ.பி. அடிச்சிட்டு நாள ஓட்டிட்டோம். திடீர்னு ஒருநாள் என்னோட மேனேஜர் வந்து, "என்ன வேலை எல்லாம் முடிஞ்சுதானு?" கேக்க, நானும் என் டீம்மேட்டும், பொய் சொல்லி எஸ்கேப் ஆகிடலாம்னு பேச ஆரம்பிச்சா, எங்களுக்கு, முகம் கை எல்லாம் வேர்த்து, உளரு உளருனு உளர, தலைவர், எங்களோட நிலைமையை தெளிவா தெரிஞ்சுக்கிட்டார். சரி போய் தொலையுது, ஒரு வாரம் டைம் தர்றேன், வேலைய முடிச்சிடுங்கனு சொல்லிட்டு போயிட்டார்.


அது வேற தீபாவளி நேரம். அடுத்த அஞ்சு நாளும், மாங்கு மாங்குனு வேலை பார்த்து, ஒரு வழியா பாதி வேலைய முடிச்சிட்டோம். "சார்... தீபாவளிக்கு ஒரு நாள் லீவு வேனும் சார்னு" கெஞ்சி கேட்டு, ஊருக்கு கெளம்பீட்டோம். ஊர்ல இருந்து திரும்பி வந்தவுடன், எனக்கு காய்ச்சல் வர, ஒரு வாரம் லீவு எடுத்துட்டேன். ஏனோ ஆபீஸ் போறதுக்கு முந்தின நாளு என் மேனேஜர் என்னோட பகல் கனவுல, நரசிம்ஹ அவதாரமா, யமன் போல எல்லாம் வந்தார். வீட்ல இருந்த, டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும், தட்டு தட்டுனு தட்டிட்டு, நெக்ஸ்ட் நாள் போய், வேலையை முடிச்சிட்டேன். மேனேஜரும் வேற வழி இல்லாம, சுபம் போட்டுட்டார்.

இந்த சம்பவத்த, பின்னாடி ஒரு நாள், என்னோட வேற மேனேஜர்கிட்ட சொன்ன போது, அவரு "அட அப்பரண்டீஸுகளா... நீங்க ஒரு நல்ல டெக்கி'யா வரனும்'னா முதல்ல நல்லா பொய் பேச கத்துக்கனும்.. அப்போதான் க்ளயெண்ட் எல்லாரையும் நல்லா சமாளிக்கமுடியும்..." அப்படீன்னாரு... ஆயிரத்துல ஒரு வார்த்தை... இப்பெல்லாம், நான் வேலையை முடிக்கலைனாலும், சூப்பராவே சமாளிச்சுடுவேன் (ஆனா பெரும்பாளும் எல்லா வேலையையும் ஒழுங்கா முடிச்சிடுவேன்). அதேபோல சில இடத்துல பொய் சொல்றது தப்பில்லை. ஏன்னா வள்ளூவரே சொல்லிருக்காரு....

"பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்"

அதாவது.. "குற்றம் தீர்ந்த நன்மையை விளைக்குமானால் பொய்யான சொற்களும் வாய்மை என்று கருதத்தக்க இடத்தைப் பெறுவனவாம்."

உலகத்திலேயே வள்ளூவர் ஒருவர் தான், இந்த மாதிரி சூள்நிலையில், பொய்யையும் உண்மையென கொள்ளவேண்டும்'னு சொன்னாரு...

ஆக மொத்தம் நான் எல்லாருக்கும் சொல்லிகிறது இன்னான்னா "பொய் பேச கத்துக்கோங்க...தெள்ளத் தெளிவா உளராம பொய் பேச கத்துக்கோங்க..."

1 comment:

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்