என் அலைவரிசையில் - மசாலா மிக்ஸ் 16 Sep 2009


நண்பர்களுக்கு நன்றி


என் எழுத்தையும் மதிச்சு, 10 பேர் என் வலைப்பதிவைப் பின்தொடர்கிறார்கள். பதிவு ஆரம்பிச்சு ஒரு மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள 10 பேர் பின்தொடர்வது ரொம்ப சந்தொஷமாகவும், பெருமையாகவும் இருக்கு. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இனி கொஞசம் பதிவுகள் எல்லாமே கவனமா எழுதனும்.

****************************************************************

சமீபத்தில் ரசித்தவை

சமீபத்தில் சில பல நாவல்கள்/புத்தகங்கள் படித்தேன். அவற்றைப் பற்றி விமர்சணம் எல்லாம் இங்கே நான் எழுதப்போவதில்லை. ஜஸ்ட் அதிலிருந்து நான் ரசித்த சில பகுதிகள், இதோ உங்களுக்காக...

சுஜாதாவின் 24 ரூபாய் தீவு நாவலில் இருந்து...

ரூபா: ஹீ இஸ் வெய்ட்டிங் டு லே மீ...

விசுவநாத் மனதிற்குள்: (அதிர்ச்சியுற்றேன். மட்டமான விஷயங்களை இங்கிலீஷில் எவ்வளவு சொகுசாக சொல்லிவிட முடிகிறது!) நான் உங்களைப் பார்க்க வந்ததில் எந்தவிதமான ஹரிஸாண்டல் இண்டென்ஷனும் இல்லை.

கிரேஸி மோகனின் அமெரிக்காவில் கிச்சா புத்தகத்திலிருந்து...

கிரேஸி (கிச்சாவிற்கு அதிர்ஷ்டம் அதிகம் என்று நிரூபிக்க சொன்ன வாக்கியம்): "சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கிச்சாவுக்கோ அதிர்ஷ்டம் அவனை திருப்பி அடித்து, தொடையில் கிள்ளி, காதை திருகி தரதரவென்று இழுத்துச் செல்றது."

சாதாரணமாக வாயில் சிங்கப்பல் முளைத்தால் அதிர்ஷ்டம் என்பார்கள். எப்போதும் அசாதரணமாக நடந்துகொள்ளும் அல்லது நம்மைக்கொல்லும் 'நூடுல்ஸ் தலையன்' கிச்சாவுக்கு இருக்கும் அதிர்ஷ்டத்துக்கு அவன் வாயில் சிங்கப்பல் என்ன, சிங்கமே முளைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

சுஜாதாவின் நிர்வாண நகரம் நாவலில் இருந்து ஒரு கவிதை...

லிஃப்டில் நுழைந்து
இறங்குகையில்
நானும்
ஒரு பன்ச் கார்ட்
பெண்ணும் தனியே
அவளைக்
'காதலிப்பதா...
கற்பழிப்பதா' என்று
யோசிப்பதற்குள்
கீழே
வந்து
வெளியே சென்றுவிட்டாள்.

****************************************************************

நல்ல பிசினஸ்

கீழே உள்ள தகவல் என்னோட மேனேஜர் சொன்னது. வெரி இண்ட்ரஸ்டிங்.

துவாலு என்றொரு நாடு பசிபிக் பெருங்கடலில் இந்தோனேசியாவிற்கு அருகில் உள்ளது. அந்த நாட்டின் internet top-level domain .tv (நமது .in போல). அதனால் பல டி.வி சேனல் அதிபர்கள் அந்த நாட்டு மக்களுக்கு, கோடிக்கணக்கில் பணம் கொடுத்து, அந்த domain'கான ராயல்டியைப் பெற்றுவிட்டனர். துவாலு நாட்டினரின் முக்கிய தொழிலே மீன்பிடித்தல் தான். இந்த ராயல்டியால் வந்த பணத்தின் மூலம், அவர்களுக்கு பெரும் லாபம் தான் (ஒரு பயலும் அங்க browse பன்ன போவதில்லை). அதேபோல் மைக்ரோனேஸியா என்ற சிறிய தீவுக்கூட்டத்தின் domain name .fm. அவர்களும் நன்னா காசு பார்த்தாச்சு.

எப்படியெல்லாம் சம்பாதிக்கிறாய்ங்க...

****************************************************************

உலகநாயகனுக்கு வாழ்த்துக்கள்

இந்த வாரம் திரையுலகில் 50 வருடத்தைக் கடந்த கமல்ஹாசனின் "உன்னைப்போல் ஒருவன்" படம் ரிலீஸ் ஆகுது. எப்படியாவது வரும் மூன்று நாள் லீவுல உன்னைப்போல் ஒருவன் மற்றும் ஈரம் படங்களைப் பார்த்துடனும். பை தி வே.. வாழ்த்துக்கள் கமல் சார். நீங்க இன்னும் பல படங்கள் இதுபோல் நடிக்கனும் என்று மனமாற வேண்டிக்கொள்கிறேன்.

****************************************************************

சமீபத்திய எரிச்சல்

இப்போ கொஞ்ச நாளா கம்பெணி பஸ்'ல போகாம, பெங்களூர் BMTC'ல் தான் போறேன். சில்லரை இல்லைனா டிக்கெட் பின்னாடி சில்லரை எவ்வளவு குடுக்கனும்னு எழுதிட்டு போயிடறாய்ங்க, இங்க இருக்கிற கண்டக்டருங்க.. இது எல்லா ஊரிலும் நடக்குதுன்னு சொல்ரீங்கன்னு தெரியுது. ஆனா இங்க சில்லரை கேக்க போனா, டிக்கட்டை திரும்ப வாங்கிக்குறானுங்க.. அந்த டிக்கட்டை வேற ஆட்களுக்கு குடுத்தற்றானுங்க. அப்படி ஒரு டிக்கட்டை நானும் வாங்கும் நிர்பந்தம் ஏர்பட்டது என் இயலாமையும் கூட. இதை பல பஸ்'ல பார்க்குறன். இதுக்காகவே எப்படியாவது கஷ்டப்பட்டு இப்பெல்லாம் சரியான சில்லரை கொடுத்துதான் டிக்கட் வாங்கறேன்.

****************************************************************

பி.கு: கிரேஸியின் அமெரிக்காவில் கிச்சா பற்றி கண்டிப்பாக ஒரு கட்டுரை எழுதியே தீரவேண்டும். அதற்கு முன் ஒரு செய்தி. நான் மிகவும் சிரமப்பட்டு கவிதை எழுத முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். கவிதை ரிலீஸ் கூடிய விரைவில்.

And for now, நண்பர்களே பதிவைப் படித்துவிட்டு மறக்காமல் பின்னூட்டமிடுங்கள். நன்றி.

Comments

Popular Posts