நாஸ்டால்ஜியா 01 - நள்ளிரவில் கொடும்பசி


நான் இப்போ சொல்லப்போற சம்பவம் நடந்து ரெண்டு வருஷம் ஆகிடுச்சு. காலேஜ் முடிச்சதுக்கப்புறம் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம். நாங்க ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் இப்பவும் ரசிச்சு சிரிக்கிர ஒரு சம்பவம். சரி பில்ட்-அப் போதும், அந்த சம்பவம் சம்பவம்னு சொல்லறீங்களே, அப்படீனா என்னனு கேக்கறீங்கனு புரியுது. இதோ உங்களுக்காக அந்தச் சம்பவம்....

அப்போ நாங்க ஃப்ரண்ட்ஸ் கொஞ்சபேர் பெங்களூர்ல B.T.M Layout'னு ஒரு ஏரியால தங்கியிருந்தோம். ஒரு சனிக்கிழமை நைட்டு. ஏதோ காரணத்தினால, சரக்கும் அன்னிக்கி வாங்கல. சும்மா லைட்டா டின்னர் சாப்பிட்டுட்டு, வீட்ல வந்து ஏதோ சேனல்ல காமெடி பார்த்துக்கிட்டு இருந்தோம். கரண்ட் கட் ஆகிடுச்சு. சரின்னு எல்லோரும் டைம் பாஸ் பன்ன, தமிழ் படத்துல வரும் காமெடி காட்சிகளை நடிச்சிகிட்டும், Dumb Charades வெளயாடிட்டும் இருந்ததுல ரொம்ப நேரம் ஆகிடுச்சு. அப்போதான் Mildஆ பசி தெரிய ஆரம்பிச்சுது. எனக்கு மட்டும் இல்லைங்க. வூட்ல இருந்த அத்தனை பசங்களுக்கும் பசி வந்துட்டது. வீட்ல ஏதாவது சாப்பிட இருக்கானு பார்த்தா, ஒன்னுமில்ல. டைம் வேற நைட்டு ஒரு மணி. இந்த நேரத்துக்கு எந்த கடை தொறந்திருக்கும்? சரி ஆனது ஆச்சுனு ஒரு எட்டு போய் பார்த்துடலாம்னு மெயின் ரோட்டுப் பக்கம் வந்தா ஒரு கடை கூட இல்லை. ஒரு தம் போடக்கூட வழி இல்லை. என் ஃப்ரெண்ட் புன்னியவான் ஒரு ஆட்டோ டிரைவர் கிட்ட நைசா பேசி ஒரு தம் வாங்கிட்டு வந்தான். அதை வாங்கி ஒரு இழுப்பு இழுத்துட்டு ஆஷ் தட்டரேன்னு தம்'ம வேற அனைச்சிட்டேன்.... ஒட்டுமொத்த கூட்டமும் எனக்கு பொதுமாத்து போட; "Nothing but Windனு" நான் டயலாக்குட; சமரசமாகி சாப்பாட்டுக்கு வழி தேட ஆரம்பிச்சோம்.

அங்க இருந்து கொஞ்ச தூரம் நடந்து ஆட்டோ டிரைவர் கிட்ட, இந்த நேரத்துக்கு சாப்பாடு எங்க கிடைக்கும்னு கேட்டா, கலாசிபாளையம், மெஜெஸ்டிக் போனா இருக்கும் ஒரு 200 ரூபாய் குடுங்க போலாம்னாரு. 400 ரூபாய் குடுக்கறோம் வாங்கனு என் நண்பன் சொன்னது புரியாமல் என்ன? என்று ஆட்டோவாலா கேக்க, நண்பனை தள்ளிக்கொண்டு "ஆணியே புடுங்க வேனாம்னு" வேறு ஒரு ஆட்டோவை நோக்கி நடக்கலானோம்.. அப்போதான் ஒரு புண்ணியவான், பக்கத்துல ஒரு முஸ்லிம் ஏரியா இருக்கு. அங்க போனா சாப்பாடு கெடைக்கும்னு சொன்னாரு. அப்போதான் அட இது ரம்ஜான் மாசம் இல்லனு தோனிச்சு. கைப்புள்ள எடுடா வண்டிய, அமுக்குடா ஹாரன'னு கெளம்பி, நைட்டு 1:30 மணிக்கு அந்த ஏரியாக்குள்ளார போனா, பிஸினஸ் சும்மா களைகட்டுது.

ஒரு கடைல சப்ளை பன்னின பையன் "சார் குஸ்கா மட்டும்தான் இருக்கு சார்"னான். வெரும் வொய்ட்ரைஸ்னாலும் பரவாயில்லை கொண்டானு சொன்னோம். சுட சுட குஸ்கா கெடைச்சுது. செம கட்டு கட்டினோம். இந்த ரணகளத்திளையும் என் ஃப்ரெண்டு, "மாஸ்டர் ரெண்டு ஆஃப் பாயில்'னு" கேட்டு வாங்கி திங்கறான். சாப்பிட்டுட்டு ஒரு பீடா போட்டுட்டு, கெளம்பலாம்னு ஆட்டோல போய் உக்காந்த பிறகு, என் ஃப்ரெண்டு கடை முதலாளி கிட்ட கேட்டான் - "சார் இப்போ எங்கயாவது Wineshop தொறந்திருக்குமா???".. அவ்ளோதான்... தர்மடி விழறதுக்குள்ள சட்டுபுட்டுனு ஸ்பாட்ட காலி பன்னிட்டு அப்பீட்டாகிட்டோம்....

Comments

sirithane rasithane :)

http://gkpstar.googlepages.com/
நன்றி கார்த்திக் பிரபு.. :)
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்
Venkatesan said…
எழுத்து பிழையை சரி செய்யவும் "நண்பர்கள்"
சரி செய்தாயிற்று.. :)

Popular Posts