வாழ்க ஜனநாயகம்


இந்த வருடம் ஆகஸ்டு 15 அன்று நாம் நமது தேசத்தின் 62'வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். 1947 ஆம் ஆண்டு பிறந்தவர்கள் ரிட்டையர் ஆகி இரண்டு ஆண்டுகள் கழிந்திருக்கும். இந்த 62 வருடத்தில் இந்தியா கண்டிப்பாக மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. ஆனாலும் நமக்கென்று இருக்கும் சில பழக்கங்கள் இன்று வரை மாறாமல் இருப்பது தான் வருந்தத்தக்க விஷயம்.

உதாரணம் - இன்று உலகம் முழுவதும் மக்கள் பன்றி காய்ச்சலைப் பார்த்துச் சற்று குலை நடுங்கித் தான் போயிருக்கிறார்கள். இந்தியாவிற்கு அதுவும் சென்னைக்கு இந்தக் காய்ச்சல் வந்துவிட்டது. விழைவு மாஸ்க்'கின் விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது. அறுபது ரூபாய் விற்ற மாஸ்க் இப்பொழுது நானூறு ரூபாய்க்கு விற்கின்றது. இந்த அடுத்தவன் எப்படிப் போனால் என்ன, என் பிழைப்பு ஓடினால் சரி என்ற மனப்பான்மை என்று தான் தீருமோ?

ட்ராபிக் சிக்னலில் படித்தவர்கள் கூட சந்துபொந்தில் பூந்து; தான் மட்டும் சென்றுவிட்டால் போதும் என்றே நினைக்கிறார்கள். அடுத்தவர்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. எத்தனை பேர் குப்பைகளை ஒழுங்காக குப்பைத்தொட்டியில் போடுகிறீர்கள்? இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

நமக்குப் பின் முன்னேறிய நாடுகளான சீனா, தைவான், மலேசியா எல்லாம் இன்று நம்மை விட அனைத்துத் துறையிலும் முன்னணியில் இருக்கின்றன. காரணம் - உழைப்பு, நாட்டின் மேல் உள்ள அக்கறை. மற்றும் தனி மனித ஒழுக்கம். இந்த வருட சுதந்திர தினத்தன்று நாம் அனைவரும் அட்லீஸ்ட் தனி மனித ஒழுக்கத்தை ஒழுங்காக கடைபிடிப்போம். நாடு தானாக முன்னேறும்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். வாழ்க ஜனநாயகம்.

Comments

Popular Posts