சுஜாதா - நான் வழிபட்ட எழுத்தாளர்


எங்க
அப்பா நிறைய புத்தகங்கள் படிப்பார். எனக்கு சின்ன வயசுல ஆனந்த விகடன் வர ஜோக்ஸ் தவிர வேற எதுவும் படிக்க தோனல. ஒரு முறை என்னோட வீடியோ கேம் ரிப்பேர் ஆகி, பவர் கட்டும் ஆனதுல வேற வழி இல்லாம நம்ம சுஜாதா சாரோட "மேற்கே ஒரு குற்றம்" என்ற நாவலை படிச்சேன்.

சுஜாதா சாரோட புகழ்பெற்ற கணேஷ்-வசந்த் வர இந்த நாவல், என்ன உடனே இம்ப்ரெஸ் பண்ணிடுச்சு. கணேஷோட புத்தியும் வசந்தோட குறும்புத்தனமும்; படிக்க படிக்க ஒரு புது ஆசைய உண்டாக்கிடுச்சு. அந்த நாவல படிச்சு முடிச்சதுக்கப்புறம் வேற எதாவது சுஜாதா நாவல் இருக்கானு தேடி "நில்லுங்கள் ராஜாவே", "கணேஷ் X வசந்த்", "என்றாவது ஒரு நாள்", "எதையும் ஒரு முறை", "மறுபடியும் கணேஷ்", போன்ற நாவல்களை வாங்கிப் படிச்சது மட்டும் இல்லாம சேர்த்துவைக்க ஆரம்பிச்சேன்.

காலேஜ் போன பிறகு இந்திரா சௌந்தரராஜன் நாவல்ஸ் சின்னதா ஒரு ஆர்வம் உண்டாச்சு. ஆனா சுஜாதா சாரோட நாவல்கள் மாதிரி என்னை வேற எந்த நாவலும் கவரலை. வேலைக்கு சேர்ந்த பிறகு, என்கிட்ட கொஞ்சம் காசு சேர்ந்த பிறகு, நிறைய சுஜாதா நாவல்ஸ் வாங்க ஆரம்பிச்சேன். என்னோட ரூம்மேட்ஸும் சுஜாதா நாவல் பிரியர்களாக இருக்கறது எனக்கு ரொம்ப சௌகரியமா இருக்கு.

இப்போ என்கிட்ட சுமார் 100 சுஜாதா நாவல்கள் இருக்கு. பொழுது போகாத நேரத்துல திரும்ப திரும்ப இந்த நாவல்களை எடுத்து படிச்சிகிட்டே இருப்பேன். இனி வர சில போஸ்ட்ஸ்- சுஜாதா சாரோட புகழ்பெற்ற நாவல்களை பற்றி ஒரு சின்ன அறிமுகம் குடுக்கறேன். முக்கியமா அதுல கணேஷ்-வசந்த் நாவல்ஸ் நிறைய இருக்கும். ;-)

பி.கு. : வி மிஸ் யு சுஜாதா

Comments

hi friend nanum ungalai pola than en blog parunga theiryum

nama books share panikalama ..ennai padinga namabikai vandha pin g_prabhu@infosys ku mail pannuga

pls dont publish my id here

thanks
நன்றி குப்பன்.யாஹூ :)
தயாஜி said…
நண்பரே, எனக்கும் அவ்வாரே
இன்னமும் சுஜாதாவின் நாவல்கள் என் படுக்கை பகிர்கின்றன. மேலும் அவரின் பல புத்தகங்களை தேடுகின்றேன்.
இந்திரா சௌந்திரராஜனின் எழுத்துகளும் என்னை கவர்ந்தவைதான்.
முன்னவர் விஞ்ஞானத்தில் மெஞ்ஞானம் சொல்லி யோசிக்கவைப்பார்
பின்னவர் மெஞ்ஞானமத்தில் விஞ்ஞானம் சொல்லி
சிந்திக்கவைப்பார்.....

இப்படிக்கு
தயாஜி வெள்ளைரோஜா
நன்றி நண்பரே... கல்லூரி படிக்கும் காலங்களின், நானும் என் நண்பன் ஒருவனும், இந்திரா செளந்தர்ராஜனின் அஷ்டமா சித்தி நாவல்களைப் படித்துவிட்டு, ஒரு மாதிரி திரிந்த கதைஇ கூட உண்டு.. அதைப்பற்றி கூட ஒரு பதிவு எழுத வேண்டும்.. :)

Popular Posts