என் முதல் தமிழ் பதிவு


நெடு நாளாகவே தமிழில் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கவேண்டும் என்பது வெறும் கனவாகவே இருந்து வந்தது. ஒரு வழியாக நானும் தமிழில் ஒரு வலைப்பதிவு ஆரம்பிப்பதில் மகிழ்ச்சி.

இந்த வலைப்பதிவில் பெரிதாக ஒன்றும் நான் சொல்லப் போவதில்லை. நான் படித்து ரசித்த புத்தகங்கள், பார்த்து வியந்த படங்கள் மற்றும் கேட்டு மகிழ்ந்த பாடல்களின் விமர்சனம், பொதுவான எண்ணங்கள், இவைகள் தான் இந்த அலைவரிசையின் பிரதான நிகழ்ச்சிகள்.

இன்று ஆகஸ்ட் 7. என் தங்கையின் பிறந்த தினம். இந்த தினத்தில் இந்த வலைப்பதிவை ஆரம்பிப்பதில் நான் "ரொம்ப குஷியா இருக்கேன்". இது வரைக்கும் கஷ்டப்பட்டு நல்ல தமிழ்ல பேசிட்டு வந்தேன். ரொம்ப கஷ்டமா இருக்கு. நமக்கு இந்த தமிழ் தான் சரி.

என்னோட மத்த வலைப்பதிவுகளுக்கு நீங்க குடுத்த பாராட்டுகள் தான் என்னை இன்னொரு வலைப்பதிவை ஆரம்பிக்க தைரியம் குடுத்தது. உங்க அனைவரின் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

அன்புடன்,
முத்துசெல்வன் சிவம்.

Comments

KingMaker said…
shabaash partner..kalakureenga ponga..

then EN Iniya pirandha naal vazthukkal to your sister..
YumYes said…
Nandri partner... :)
Bhargavi said…
Achilles ungala pathi paraturadhuku indha blog comments space ellam paththaadhu. Ungal tamilzh patru parattathakkadhu... Zha-garam pathi oru kavithai ezhudhalamae!! Ethirparpudan .. RedRose :)
YumYes said…
Sure will write a kavidhai.. :)

Popular Posts